மாங்குளம் வெடி விபத்தில் கணவா் பலி! மனைவி எடுத்த விபரீத முடிவு!!
முல்லைத்தீவு மாங்குளம் பாலைப்பாணி பகுதியில் நேற்று முன்தினம் மிதி வெடிஅகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது நிலத்தில் மறைந்திருந்த வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் பலியாகியுள்ளார்.
மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலை யில் வவுனியா வைத்தியசாலையில் அனு மதிக்கபட்டு சிகிச்சை பெற்றுவந்திருந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த இளைஞர் நேற்று மாலை மரணமடைந் துள்ளாா்.
குறித்த நபர்கள் மிதி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது பற்றைப் பகுதியை துப்புர செய்த வேளை டொங்கான் என்ற வெடிபொருள் வெடித்து படு காயமடைந்துள்ளனா்.
பின்னர் அருகில் இருந்த ஏனைய ஊழியர்கள் அவர்களை மீட்டு மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன் மற்றையவர் மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சம்பவத்தில் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த பத்மநாதன் திலீபன் என்ற இளை ஞன் சம்பவ தினமே மரணமடைந்ததுடன் வவுனியா பறநாட்டாங்கல்லை சேர்ந்த இராசேந்திரன் நிதர்சன் வயது 28 என்ற இளைஞனே சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார்.
குறித்த இளைஞர் திருமணம் முடித்து 8 மாதங்களாவதுடன் கணவனது மர ணத்தை தாங்க முடியாது அவரது மனைவி நேற்றைய தினம் நஞ்சருந்தி யுள்ளார். நேற்று காலை தனது கணவனை வவுனியா வைத்தியசாலையில் பார்வையிட்ட சாரதா வயது 22 என்ற அவரது மனைவி கணவனது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படாத காரணத்தினால் மனமுடைந்த நிலை யில் நஞ்சருந்தியுள்ளார்.
பின்னர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு தற் போது சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மாங்குளம் பாலைப் பாணி பகுதியில் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக DASH என்ற நிறுவனத் தால் வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வருவதுடன் பல சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் வவுனியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.









