மகிந்தவின் பேரணியினால் 81 பேர் வைத்தியசாலையில்; ஒருவர் பலி!
கூட்டு எதிர்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கல ந்து கொண்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசா லையின் அவசர பிரிவு தெரிவித்துள்ளது.
ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒரு வரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரி விக்கப்படுகின்றது.
மாரடைப்பு காரணமாக இந்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்திய சாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்க ளில் 81 பேர் சுவசெரிய இலவச அம்புல ன்ஸ் வண்டிகள் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப் பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
மஹிந்த தலைமையிலான குழுவினர் கொழும்பை முடக்கும் வகையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அதிகளவானோர் குடிபோதையில் வீதியில் கிடந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் இலவச அம்புலன்ஸ் சேவை ஊடாக வைத்தியசாலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.









