Breaking News

யாழில் விபத்து ; ஒருவர் பலி, இன்னொருவா் காயம்.!

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் நடைபெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயி ரிழந்துள்ளதுடன் இன்னொருவர் காயமடைந்துள்ளார். 

இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் யாழ்ப்பாணம் கொடிகாமம் இராமாவில் பகுதியில் நடைபெற்றுள்ளது. 

வேனொன்றும் இரு சக்கர உழவு இயந் திரமும் மோதிக்கொண்டதிலேயே குறி த்த விபத்து நடைபெற்றபோது காயமடைந்த சரசாலையைச் சேர்ந்த மு.சிவசங்கர் என்பவர் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை க்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளாா். .

சரசாலையை சேர்ந்த 55 வயதுடைய க. விக்னேஸ்வரன் என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளாா்.   விபத்தையேற்படுத்திய வாகனச் சாரதி விசாரணைக்காக பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா்.