Breaking News

கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு முன் போராட்டம் நடத்திய முதியவா் கைது..!

கிளிநொச்சியில் நீதிமன்ற வளாகத்தின் முன் போராட்டம் நடத்திய முதியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக் கல் நாட்டும் நிகழ்வு நேற்று காலை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளா கத்தில் நடைபெற்றவேளை மேடை க்கு நேர் எதிராக ஏ9 பிரதான வீதியின் ஓரமாக காணப்பட்ட பூவரசு மரத்தில் இருந்து முதியவர் கையில் ஒரு பதாகையை ஏந்தியவாறு உரத்த குரலில் சத்தமிட்டுள்ளாா். 

முதியவர் பொலிஸார் இலஞ்சம் வாங்குவதாகவும், குறிப்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உள்ள (ஒருவரின் பெயரை குறிப்பிட்டு) அவர் இலஞ் சம் பெறுவதாகவும் தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளாா். 

போராட்டம் நடத்திய முதியவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர் நீதிமன்றத்தை அவமதித்ததுடன் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடையுறு வழங்கினாா் என்ற குற்றச் சாட்டிலையே குறித்த முதியவர் கைதாகியுள்ளாா். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட முதியவரை இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் (ஒருவரின் பெயரை குறிப்பிட்டு) இலஞ்சம் பெறுவதாகவும் முதிய வரால் தெரிவிக்கப்பட்டதனை அடுத்து வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலி ஸ்மா அதிபர் றோசான் பெர்னாண்டோ அவர்களினால் குறித்த பொலிஸ் உத் தியோகத்தரை எவ்வித விசாரணைகளும் இன்றி இன்று காலை நெடுந்தீவி ற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.