விடுதலைப் புலிகளின் தலைவரது மனைவி, புதல்வி இறந்து விட்டதாக- சரத் பொன்சேகா!
விடுதலைப் புலிகளின் தலைவரது மனைவி, புதல்வி உட்பட அனைவரும் முன்வரிசையில் நின்று போராடி உயிரிழந்தார்கள் என்பதுவும் புலனாய்வுத் தகவலுக்கு அமைய அறியக்கிடைத்தது” எனவும், இறுதிக்கட்ட போரின் போது ஏழாயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கலாமென சிறிலங்கா இராணுவத் தின் முன்னாள் தளபதியான சரத் பொன்சேகா இன்றைய (07.09.2018) தெரிவித் துள்ளார்.
மேலும் தெரிவித்ததாவது.,
ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தி யுள்ளது போல் நாற்பதாயிரம் பொது மக் கள் கொல்லப்படவில்லையெனத் தெரிவித்துள்ள சிறிலங்கா இராணு வத்தின் முன்னாள் தளபதியும், தற் போதைய மைத்ரி ரணில் அரசாங்கத் தின் அமைச்சருமான சரத் பொன்சேகா, சிறிலங்கா இராணுவத்தினர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளாா்.
கொழும்பில் இன்றைய தினம் சரத்பொன்சேகா நடத்திய ஊடகவியலாளர் சந் திப்பிலேயே இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.
மைத்ரி – ரணில் தலைமை யிலான சிறிலங்கா அரசாங்கத்தின் பிராந்திய அபிவிருத்தி மற்றும் வன ஜீவ ராசிகள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஏற்பாடு செய்திருந்த ஊட கவியலாளர் சந்திப்பு கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள அவரது அமை ச்சின் கட்டிடத் தொகுதியில் இன்று பகல் நடைபெற்றது.
ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்த நேரத்திலிருந்து சுமார் ஒரு மணித்தி யாலம் தாமதித்து வந்த அமைச்சர் பொன்சேகாவிடம், இறுதிக்கட்ட போரின் போது பொது மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவினர்.
பொது மக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியிருக்கின்ற புள்ளி விபரங்கள் அப்பட்டமான பொய்கள் என்று கூறிய இறுதிக்கட்ட போரின் போது சிறிலங்கா இராணுவத் தளபதியாக இரு ந்த அமைச்சர் சரத் பொன்சேகா,
வெறும் ஏழாயிரம் பொது மக்களே கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் போர் முடிந்த போதும், அதற்குப் பின்னரும் அப்போதைய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவும் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவும் அவரது அரசாங்கமும் இறுதிக்கட்ட போரின் போது பொது மக்கள் கொல்லப்படவில்லை என்று அடித்துக் கூறி வந்தனர்.
எனினும் தற்போது ஏழாயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக ஒப்புக் கொண்ட பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, அதிலும் நான்காயிரம் பேர் விடுத லைப் புலிகளினால் அவர்களது பதுங்கு குழிகளுக்கு காவலுக்கு அமர்த்தப்பட் டவர்களும் அடங்குவதாக கூறி பொது மக்களுக்கு ஏற்பட்ட இழப்பை நியாயப் படுத்த முற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
“இறுதிக்கட்ட போரில் அதிகபட்சமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 அல்லது 8 ஆயிரமாகும். அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் நிச்சயமாக விடுதலைப் புலி உறுப்பினர்கள் அல்லர். போரில் 23 ஆயிரம் விடுதலைப் புலிப் போராளிகள் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்கள். 12 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டார்கள்.
பொது மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இருந் தது. ஆபத்திலிருப்பவர்களை பாதுகாப்பு பகுதிக்கு அழைத்துச் செல்வதற்காக கப்பல் ஒன்றும் தயாா் செய்யப்பட்டிருந்தது.
போரின் இறுதி வாரம் வரை அந்தக் கப்பல் சேவை இடம்பெற்றது. அப்போது கூட 30 ஆயிரம், 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்று அறியக்கிடைக்க வில்லை. புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் அப்படியென்றால் பார்க்கின்ற ஒவ்வொரு இடங்களிலும் மனித எச்சங்கள் காணப்பட்டது.
அது முற்றிலும் பொய்யான தகவல். அதேவேளை பொது மக்களில் 4 அல்லது 5 ஆயிரம் பேர் விடுதலைப் புலிகளினால் பதுங்குக் குழிகளில் காவல் கடமை யில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் இருந்தார்.
அவர் ஆசிரியர். அந்த ஆசிரியருக்கு அவரது மாணவர்களுடன் துப்பாக்கி ஒன்றை வழங்கி மன்னார் பகுதியில் பதுங்குக் குழியில் பாதுகாப்பு கடமை யில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். அதனால் எமது தாக்குதல்களில் குறிப்பிட்ட எண்ணிகையில் பொது மக்கள் உயிரிழந்திருக்கலாம்.
4 ஆயிரம், 5 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கலாமே தவிர 40 ஆயிரம் பேர் பலியானார்கள் என்று கூறுவது பொய்யான தகவலாகும். அப்படி நிகழ்ந்திருந் தால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அப்புறப்படுத்தும் மேலதிக பணியும் எம்மால் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இளைய புதல்வர் பாலகிருஷ்ணன் சிறிலங்கா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டு ஒரு போர் குற்றமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,
தமிழீழ விடுதலைப்புலிகளின் குடும்ப உறுப்பினர்களும் போரின் முன்னரங் குப் பகுதிகளில் போராடியே உயிரிழந்ததாகவும் சர் பொன்சேகா தெரிவித்தார்.
“ புலனாய்வுத் தகவலுக்கு அமைய 35 ஆயிரம் விடுதலைப் புலிப் போராளிகள் போர் வலயத்தில் இருந்ததாக தெரியவந்தது.
தினமும் உயிரிழக்கின்ற விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை விடுதலைப் புலிகளின் “புலிகளின் குரல்” வானொலி ஊடாக எமது இராணுவம் அறிந்துகொண்டது.
அவ்வாறு பெற்றுக்கொண்ட தகவலுக்கு அமையவே 23 ஆயிரம் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகள் பலியான தகவல் பெற்றுக்கொள்ளப்பட்டது. விடு தலைப் புலிகளின் தலைவரது மனைவி, புதல்வி உட்பட அனைவரும் முன் வரிசையில் நின்று போராடி உயிரிழந்தார்கள் என்பதுவும் புலனாய்வுத் தக வலுக்கு அமைய அறியக்கிடைத்தது.
சிறிலங்கா இராணுவம் தமக்குரிய இராணுவப் பணிகளை விடுத்து பொது மக்களின் காணிகளை பலவந்தமாக கைப்பற்றிவைத்துக்கொண்டு விவசாய நடவடிக்கைகளிலும், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடி யாது தொடர்ச்சியாக பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருவதாக சுமத்தப் பட்டுவரும் குற்றச்சாட்டுக்களை ஸ்ரீலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் செயற்பாடுகள் இராணுவ செயற்பாடுகளை விடுத்து வேறு பாதைகளில் சென்று கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய அமைச்சர் சரத் பொன்சேகா, நாட்டில் மீண்டுமொரு யுத்தம் வெடித்தால் அத ற்கு முகம்கொடுப்பதற்கு முடியாத பலவீனமான நிலையில்
ஸ்ரீலங்கா இரா ணுவத்தின் தற்கால செயற்பாடுகள் இருப்பதாக கடுமையான விமர்சனங் களைத் தெரிவித்துள்ளாா்.
‘நான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் இராணுவத்திற்கு இருந்த பலம், உற்சாகம் இப்போது இருப்பதாக தெரியவில்லை. போரில் தோற்றுப் போகின்ற தருணங்களிலும் இராணுவம் இருந்தது. அரசியல்வாதிகளும் அதே போல பாதுகாப்பு அமைச்சர்களும் இருந்தார்கள்.
இன்றும் அவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இராணுவம் அப்படியே போகின் றது. போர் என்ற ஒன்று இல்லாததினால் பிரச்சினையில்லை. போர் ஒன்று வந்தால் தான் என்ன செய்வார்கள் என்று தெரியாது.
யுத்தமொன்று வந்தால்தான் தெரியும். போரை வென்றுகொள்ள நாங்கள் வேறொரு இராணுவத்துடன் செயற்பட்டோம். நான் பதவிக்கு வந்தபின்னர் இராணுவத்தை பல்நோக்குடன் அவர்களை தயார்படுத்தினேன்.
ஆனால் இன்று நான் ஆயத்தப்படுத்திய இராணுவத்தின் விடயங்கள் இருப் பதாக தெரியவில்லை. முழுமையாக கடமைக்கு அர்ப்பணித்த இராணுவமே எனது தலைமையில் இருந்தது. சுப்பர் குரோஸ் போட்டிகளை நான் தடை செய்தேன்.
கண்காட்சிளையும் நிறுத்தினேன். ஆனால் இன்று இராணுவம் ஹோட்டல் களையும் கடைகளையும் ஆரம்பித்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. கண்காட்சிகளையும் செய்கிறார்கள்.
அந்த துறைக்கு அவர்களை செலுத்துகையில் இராணுவ சேவையிலுள்ள உணர்வு, திறமைகள் குறைந்துவிடும்”.
‘2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி தேர்தலுக்கு முன்னர் பாதுகாப்பு தொடர்பாக எம்முடன் பல கலந்துரையாடல் களை நடத்தியிருந்தார்கள்.
ஆனால் அந்த தினத்திற்குப் பின்னர் இதுவரையிலும் பாதுகாப்பு சம்பந்தமாக என்னுடன் எவரும் பேச்சு நடத்தவில்லை” என மேலும் தெரிவித்துள்ளாா்.
- நன்றி ஐ.பி.சி .இணையத்திற்கு-








