புத்தளம் பிரதேச சபை தலைவருக்கு விளக்கமறியல்.!
பிணை நிபந்தனையை மீறியமைக்காக புத்தளம் பிரதேச சபை தலைவர் அஞ்சான சந்துருவன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிறைவடையும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நபரொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அஞ்சான் சந்தருவானுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றத்தினால் தடையுத் தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் அந்த தடை உத்தரவினை மீறி அவர், கடந்த 10 ஆம் திகதி வெளிநாடு செல்ல முயற்சித்தபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடி வரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைதாகியுள்ளாா்.
எனவே பிணை நிபந்தனையை மீறியமைக்காக அவரை வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளாா்.