Breaking News

'ஜனாதிபதி வேட்பாளர்" யார் என மஹிந்தவே தெரிவிப்பாா் - ஜீ.எல். பீரிஸ்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பொது வேட்பாளர் யார்? என்ற இறுதி முடிவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மா னிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல். பீரிஸ் தெரி வித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு 14 மாதங்களே இருக்கின்றன. ஜனாதிபதி வேட்பாள ராக மஹிந்த ராஜபக்ஷ யாரை பரிந் துரை செய்கின்றாரோ அவரை நாம் ஏற்பதா கவும் கட்சிக்குள் எந்த பிள வும் இல்லை.

எனினும் இறுதி வேட்பாளர் யார் என தெரிவிக்கும் வரை கட்சியில் உள்ளவர்கள் அவரவருக்கு விருப்பமான வேட் பாளருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். எனவே எமது அணியிலுள்ள அங்கத்துவ கட்சி தலைவர்கள் இடையே எவ்வித முரண்பாடுகளும் இல்லையெனத் தெரி வித்துள்ளாா்.