பேரணியில் பசில் கலந்து கொள்ளாதது ஏன்? :
நாமல் ராஜபக்ஷ தலைவராக முயற்சித்த முதல் முயற்சியிலேயே பாரிய தோல்வியை அடைந்த பொது எதிரணியின் அரசை கவிழ்க்கும் போராட்டத் தில் பசில் ராஜபக்ஷ பங்கேற்கவில்லை என்பது உள்வீட்டு பிரச்சினையின் வெளிப்பாட்டை வெளிக்கொணர்ந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜே.சீ. அலவத்துவல தெரிவித்துள்ளாா்.
உள்ளூராட்சி தேர்தலின் போது பொது ஜன பெரமுன பெற்றுக் கொண்ட வெற்றிக்கு எதிர்மாறாக இவ் ஆர்ப் பாட்டத்தின் மூலம் பாரிய பின்ன டைவை அவர்கள் சந்தித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விஷேட ஊடகவியலா ளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள் ளது.








