Breaking News

தேர்தலிற்காக அரசிடம் சவால் விடுத்துள்ளாா்- நாமல்.!

பொது எதிரணியின் கொழும்பு ஆர்ப்பாட்டம் தோல்வியென அரசாங்கம் கருதி னால் அரசாங்கம் பொதுத்தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென நாடா ளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளாா். 

பொது எதிரணியினர் நேற்று கொழும் பில் நடத்திய பேரணியே இலங்கை யின் அரசியல்வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான பேரணி எனவும் அர சாங்கம் பேரணி நடைபெறுவதை தடுப்பதற்காக சதி நடவடிக்கைகளை எடுத்த போதிலும் நாங்கள் நினைத் ததைவிட அதிகமாக சாதித்துள்ளோம் என நாமல் ராஜபக்ச புலம்பியுள்ளாா்.

அரசாங்கம் பேரணி தோல்வி என தெரிவிக்கின்றது என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மூலம் தனக்கு எதிரான அதிருப்தி தீவிரமடைவதை பார்த்த பின்னரும் அரசாங்கம் ஏன் அவ்வாறு தெரி வித்துள்ளது என வினாவியுள்ளாா். 

நாங்கள் ஆளும் கட்சியை தேர்தலிற்கு செல்லுமாறு சவால் விடுக்கின்றோம் அதன் மூலம் அவர்களின் தலைவிதி தெரியவரும் எனவும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.