Breaking News

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்பின் கொள்கையை அனைத்துக் கட்சிகளும் ஏற்றுள்ளதாக - சுமந்திரன்.!

எழுபது வருட சுதந்திர சரித்திரத்தில் பல்வேறு தமிழ் கட்சிகள் வெவ்வேறு கொள்கைகளை முன்வைத்திருந்தாலும் கூட அனைத்து கட்சிகளும் இன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் யாப்பில் உள்ள கொள்கையே தமது கொள்ளை யென்று ஏற்றுக்கொண்டுள்ளன என இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளாா். 

சிறுப்பிட்டி தமிழறிஞர் இராவ்பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளையின் 187 ஆவது ஜனனதின நினைவு பேருரரை ''இன்றைய சமஸ்டியின் விஸ்தீர ணம்'' என்னும் தலைப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வீரசிங் கம் மண்டபத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

'சமஷ்டி" என்று அழைக்கப்படுகின்ற அரசியலமைப்பு சட்டங்களை கொண்ட எல்லா நாடுகளிலேயேும் சில "ஒற்றையாட்சி" குணாதிசங்கள் காணப்படும் அந்த நாடு பிளவுபடாமல் ஒரே நாடாக இருப்பதற்கான ஏற்பாடுகள் தான் அந்த ஒற்றையாட்சி குணாதிசயங்கள்.

ஆனால் இவற்றை காரணமாக கொண்டு அது சமஷ்டி அல்லதென்று கூறி விடமுடியாது. இன்றைய சமஷ்டி என்பது வெறுமனே பெயரளவில் நின்று விடாமல் எல்லா வகையான அரசியலமைப்பு முறைமைகளுக்குள்ளும் விஸ் தீரணமடைந்துள்ளது.

ஆகையால் சமஷ்டியென்பது வெறுமனே பெயரளவில் மட்டும் வர்ணிக்கப்ப டும் ஒரு ஆட்சிமுறையாக இருக்கமுடியாது. மாறாக ஒரு நாட்டின் அரசியல மைப்பு சட்டத்தின் உள்ளடக்கத்தை ஆராய்கின்ற போது சமஷ்டியின் அடிப் படை குணாதிசயங்கள் காணப்படுமாக இருந்தால் அதற்கு என்ன பெயர் கொடுத்தாலும் பெயரே கொடுக்கா விட்டாலும் அது சமஷ்டி ஆட்சிமுறை யெனத் தெரிவித்துள்ளாா்.