Breaking News

யாழில் நேற்றைய தினம் சுற்றுக்காவல் நடவடிக்கையில் அதிரடியாக 41 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கையில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்.

151 பேருக்கு எதிராக வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்காக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா். 

யாழ்ப்பாணம், மானிப்பாய், சுன்னாகம் மற் றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கம் பொலிஸாா் சுற்றுக் காவல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா்.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் (அத்தியட்சகர்) தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன் கடந்த 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம், மானி்ப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கை நடாத்தப்பட்டுள் ளது.

இந் நிலையில் நேற்றைய தினம் கோப்பாய் பொலிஸ் பிரிவையும் இணைத்து 4 பொலிஸ் பிரிவுகளில் இச் சுற்றுக்காவல் நடவடிக்கை முன்னெடுக்கப் பட்டுள்ளது. “வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபடுவோர் மற்றும் நீதிமன்றங் களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்படுபவர்களை இலக்காக வைத்து இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸாரால் தேடப்பட்டவர்கள் 7 பேர், நீதிமன்றங்களால் பிடியாணை பிறப் பிக்கப்பட்டவர்கள் 7 பேர், வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்ப டும் 10 பேர் என மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

மேலும் வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் என்ற குற்றச் சாட்டில் 151 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸாா் மக்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளனா்.