Breaking News

அரசியல் கைதிகளுடன் பேசவில்லையென்கிறாா் - மாவை

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்தை நிறுத்துவதா, இல்லையா என்பது குறித்து அதிகநேரம் பேசவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.  

அனுராதபுரத்தில் உண்ணாவிரதம் இருந்த அரசியல் கைதிகளின் சந்தித்து பேசிய விடயங்கள் தொடா்பாக கேட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

 மேலும் தெரிவிக்கையில்,

தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கைதிகள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசிய விடயங்களை கைதிகளிடம் தெரிவித்து அவர்களது அபிப்பிராயங்களை அறிந்து அடுத்தக் கட்டமாக எதிர்வரும் 17 ஆம் திகதி 5 மணிக்கு ஜனாதிபதியுடனும், பிரதமரு டனும், சட்டமா அதிபருடனும் பேசி முடிவை எடுக்கவுள்ளோம்.

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு சொல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருந்தது. ஆனாபடியால் அவர்களிடம் நாங்கள் இக் கருத்தை சொல்லியிருக்கின்றோம்.

உண்ணா விரதத்தை நிறுத்துவதா, இல்லையா என்பதைப் பற்றி நாங்கள் அதிக நேரம் பேசவில்லை. அவர்களது விடயங்களை அறிந்த பின் 17 ஆம் திகதி சந் திப்பு முடிய அச் சந்திப்பில் எடுக்கப்படும் முடிவுகளுடன் அடுத்த நாள் வந்து பேசுவதாக தான் தெரிவித்ததாகத் தெரிவித்துள்ளாா்.