Breaking News

ஈழத்தில் மக்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் கொலை அச்சுறுத்தல்.!!!

வவுனியா காஞ்சிரமோட்டையில் மீள்குடியேற்றிய மக்களுக்கும் மீள்குடி யேற்ற அரச அதிகாரிகளுக்கும் ஜனாதிபதியின் மாவட்ட இணைப்புச் செயலா ளர் கொலை மிரட்டல் விடுத்துள்ளமை பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுமக்களுக்கும் அரச அதிகாரிக ளுக்கும் இவ்வாறு கொலை அச்சுறுத் தல் விடுப்போருக்கு எதிராக ஜனாதி பதி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப் பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத் தியுள்ளார்.

வவுனியா வடக்கில் மிகவும் பழமை வாய்ந்த கிராமமாக காஞ்சிரமோட்டை கிராமம் காணப்படுவதுடன் அதிகளவான மக்கள் இங்கு வாழ்ந்து வரும் பிர தேசமாகும்.

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தம் நிறைவுக்கு வந்ததை அடுத்து இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மக்கள் தாம் பூர்வீகமாக வாழ்ந்து வந்த காஞ்சிரமோட்டை கிராமத்தில் மீள் குடியேறுவதற்கான நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளனா்.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளரும் அவர்களை மீள் குடியேற்றுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீடுகளை வழங்குவதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுமார் 45 நாட்களை கடந்து இப்பகுதி மக்கள் தமது காணி களில் துப்பரவுப்பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் வன வளத் திணைக்களத்தினர் இக் காணி வன வளத்திணைக்களத்திற்குரியது என தெரி வித்துள்ளதுடன் காணிகளில் எவ்வித அபிவிருத்தி பணிகளையும் மேற்கொள் ளக்கூடாதெனத் தெரிவித்துள்ளனா்.

இதன் காரணமாக இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 18 குடும்பங்களுடன் உள்நாட்டில் இடம்பெயர்ந்து மீள்குடியேறியவர்கள் உள்ளடங்கலாக 35 குடும்ப ங்கள் இக்கிராமத்தில் வாழ முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவ் விடயம் தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 05 ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் வன வள திணைக்களத்தினருக்கும் இணைத்தலைவர்களுக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுள்ளன.

இவ் விடயத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முடிவுகள் எட் டப்படுகின்ற போதிலும் கூட அவற்றை நடைமுறைப்படுத்த முடியாத நிலைமை நிலவியுள்ளது.

இந்த நிலைக்கு வவுனியா மாவட்டத்தின் ஜனாதிபதி இணைப்பாளரும் வவு னியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான டபிள்யூ ஏ.வாசல என்பவரே காரணமென தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நபர் மீள்குடியேறிய மக்களிற்கும் மீள்குடியேற்றம் தொடர்பான அரச அதிகாரிகளிற்கும் கொலை அச்சுறுத்தல் மாத்திரமன்றி பல்வேறு வழிகளில் தொலைபேசி ஊடாகவும் நேரடியாகவும் அச்சுறுத்தல்களை மேற் கொண்டுள் ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வவு னியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் இவ் விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன்போது அரச அதிகாரிகளுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுகின்றவர்க ளுக்கு எதிராகவும் நாட்டின் ஜனாதிபதி கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.