Breaking News

அரசியல் கைதிகளின் விடயத்தில் தீர்க்கமான தீா்வு கிடைக்குமா? சுமந்திரனின் கருத்தால் நம்பிக்கையிழப்பு!

தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் ஜனாதிபதியுடன் நாளை தீர்க்கமான முடிவு எட்டப்படுமா என்பதை தம்மால் உறுதியாக கூற முடியாதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித் துள்ளார்.

ஜனாதிபதியுடனான சந்திப்பில் அரசியல் கைதிகளின் விடயத்திற்கு தீர்க்கமான முடிவொன்றை பெற்றுத் தருவதாக தமி ழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா வாக் குறுதி வழங்கிய நிலையில், சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

அனுராதபுரம் சிறைசாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 10 பேரும் தொடர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில், அவர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களும் போராட்டங் களும் தமிழர் தாயகப் பகுதிகளில் தீவிரமடைந்திருந்தன.

இதன் உச்சக்கட்டமாக யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற் பாடு செய்யப்பட்ட நடைபவனி, யாழ் பல்லைகழகத்தில் இருந்து அனுராதபுரம் சிறைச்சாலை வரை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடைபவனியின் நிறைவில் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு நாளை ஜனாதிபதியுடன் நடத்தப்படும் பேச்சுக்களில் தீர்க்கமான முடிவை பெற்றுத் தருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளாா்.

அத்துடன் சிவில் அமைப்புக்களும் வழங்கிய வாக்குறுதியை அடுத்து அனுராத புரம், மெகசீன் மற்றும் கண்டி உள்ளிட்ட சிறைச்சாலைகளில் உணவுத் தவிர் ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தமிழ் அரசியல் கைதிகள் தமது போராட் டத்தை தற்காலிகமாக கைவிட்டுள்ளனர்.

இந் நிலையில் அரசியல் கைதிகளின் விடயத்திற்கு தீர்க்கமான முடிவொன்று எப்போது கிடைக்கும் என்பதை உறுதியாக கூற முடியாதெனத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் தெரிவித்துள்ளாா்.