மக்கள் விடயத்தில் ஜனாதிபதி தவறிழைத்து விட்டார் - ஜயம்பதி விக்ரமரட்ன
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கி விட்டதாக குறிப்பிடும் விடயம் அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கிய மக்க ளின் ஆணையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவறாக பயன்படுத்தி விட்டாா் எனத் தெரிவித்துள்ளாா்.
அரசியலமைப்பிற்கு முரணாக பிரத மர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை என்று குறிப்பிடுபவர்கள் அரசியல மைப்பினை முழுமையாக ஆராய வில்லை என்றே குறிப்பிட வேண் டும்.
இவ்விடயத்தில் அரசியலமைப்பு அர சியல் தேவைக்காக மாற்றியமைக் கப்பட்டு விட்டது . 19 ஆவது அரசிய லமைப்பின் 42 ஆம் அத்தியாயம் இவ்விடயங்கள் பற்றி தெளிவாக குறிப் பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் பெரும் பான்மை ஆதரவினை பெறுப வரை ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும்.
இதனை 42 ஆம் அத்தியாயத்தின் 4 ஆம் பிரிவு குறிப்பிடுகின்றது. பதவி நீக்கம் தொடர்பில் 46 (2) பிரிவு குறிப்பி டுகின்றது அதாவது பாராளுமன்றத் தின் அமைச்சரவை செயற்படும் வரையில் பிரதமர் ஒருவர் பதவி வகிக்க முடியும், பதவி காலத்தில் அவரே தன் விருப்பின் பெயரில் பதவி விலகலாம், அல்லது பாராளுமன்றத் தில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை கொண்டு வந்து அதனை நிறை வேற்றும் பட்சத்தில் பதவி விலக முடியும் என்றே 19 ஆவது திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்விடத்திலும் பிரதமராக நியமித்தவரே பதவி நீக்கம் செய்யலாம் என்று குறிப்பிடுவில்லை. 18 ஆம் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங் களை கருத்திற் கொண்டு வாதிடுபவர்கள் சுயநினைவு அற்றவர்கள் என்றே குறிப்பிட வேண்டும்.
இந் நிலையில் பிரதமரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரமோ, இடைப் பட்ட காலத்தில் அமைச்சரவையினை கலைக்கும் அதிகாரமோ ஜனாதிபதிக்கு கிடையாது. தற்போது நடைபெற்ற விடயங்கள் நடைபெறக் கூடாது என்பதற் காகவே பாராளுமன்றம் அதிக அதிகாரமுடையதாக மாற்றியமைக்கப்பட்டது என்றார்.
ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பினர் ஏற்பாடு செய்த ஊடக வியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் இவ்வாறு தெரி வித்துள்ளாா்.