Breaking News

ரணிலின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு - ஜனாதிபதிக்கு சபாநாயகர் கடிதம்

பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற ஒருவர் தெரிவு செய்யும் வரை ரணில் விக்ரமசிங்கவின் வரப்பிரசாதங்கள் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதிக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,




பாராளுமன்றத்தின் ஜனநாயக சம்பிரதாயங்களை பாதுகாக்க வேண்டியது நல் லாட்சிக்கு மக்கள் ஆணைப்பெற்ற அரசாங்கத்தின் கடமையாகும். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பாராளுமன்றத்தை நீண்ட நாட்களுக்கு ஒத்தி வைக்கின்றமை மேலும் நெருக்கடிகளுக்கு காரண மாகிவிடும்.

எனவே பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதாயின் சபாநாயரின் அறிவுறுத்தல்க ளும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஜனநாயக சம்பிரதாயமாகும். இதனை அறிவிக்க வேண்டியது எனது கடமை என்பதால் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன் என தெரிவித்துள்ள சபாநாயகர், இக் கடிதத்தின் பிரதி களை ரணில் விக்ரமசிங்க பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.