மண்மேடு சரிந்ததில் ஒரே குடும்பத்தில் நால்வர் காயம் - எச்சரிக்கை.!
சீரற்ற காலநிலைக் காரணமாக நாட்டில் பல பாகங்களுக்கும் விடுக்கப்பட் டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையானது தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
அதன்படி பாரியளவில் பாதிக்கப்பட்டிருக்கும் களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, புளத்சிங்கள, மத்துகம, பதுரலிய மற்றும் இங்கிரிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் காலி மாவட்டத்தில் தவலம மற்றும் தவக்கலமுள்ள பிரதேசங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை தொடர் ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பதுளை கொழும்பு பிரதான வீதியின் பல இடங்களில் மண் மேடுகள் சரிந்ததில் பாரிய வாகன நெறிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் தொடர்ந்து மழை பெய்யுமானால் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய கட்டடவியல் ஆய்வுநிலையம் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் களுத்துறை, நேபட பகுதியிலுள்ள இரண்டு வீடுகளின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் இவ் விபத்து நடைபெற்றுள்ளது.
இதன்போது 6 வயதுடைய பெண் பிள்ளை உட்பட 3 பெண்களும் ஆண் ஒருவருமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனா்.