Breaking News

2ம் லெப்டினட் மாலதியின் நினைவேந்தல் அனுஸ்டிப்பு!

இலங்கையில் யுத்தம் முனைப்புப் பெற்றிருந்த காலப்பகுதியில், 1987ஆம் ஆண்டு ஈழ வரலாற்றில் எவராலும் மறக்கமுடியாத ஒரு நாளாகும்.

ஈழ யுத்த வரலாற்றில் பெண் விடுதலைக்காக வும், தேசத்தின் விடுதலைக் காகவும் தனது உயிரை தியாகம் செய்த முதல் பெண் போராளி மாலதி, இந்திய இராணுவத்திற்கு எதிரான படை நடவடிக்கையின் போது கோப்பாய் கிறேசரடி பகுதியில் உயிரிழந்துள்ளாா்.

இவரது 31ம் ஆண்டு நினைவு தினம் இன்று 10ஆம் திகதி ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் அதன் மட்டு அம்பாறை இணை ப்பாளர் என். நகுலேஸ் தலைமையில் வெல்லா வெளியில் அமைந்துள்ள மாவட்ட காரியால யத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது போரதீவுப்பற்று தவிசாளர் யோகேஸ்வரன் ரஜனி கட்சி யின் மட்டு அம்பாறை ஊடக பேச்சாளர் பீ. கோனேஸ் மற்றும் கட்சியின் உறுப் பினர்கள் என பலரும் கலந்து அஞ்சலி செலுத்தியுள்ளனா்.

இந் நிகழ்வின்போது கடந்த கால ஈழ வரலாற்றின் போது உயிர்நீத்த உறவு களுக்காகவும் மாவீரர்களுக்காகவும் ஒரு நிமிட மௌன இறைவணக்கம் செலுத்தப்பட்டதுடன் மாலதியின் திருவுருவ படத்திற்கு அகல்விளக்கேற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.