இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைக்கு சீனாவே பொறுப்பு.!
இலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு சீன அரசாங்கமே கார ணமாக இருப்பதாக, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றைய தினம் அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப் பில் தெரிவித்துள்ளார்.
எனவே, நாடாளுமன்ற உறுப்பினர் களை விலைக்கு வாங்குவதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு நிதியளிக்க வேண்டாமென சீன அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன். நாடுகளை விலைக்கு வாங்குவதற்கு பூகோள அதிகார சக்தி முயற்சிகளை முன்னெ டுத்துள்ளது.
அதனை அவர்கள் பல நாடுகளில் செய்திருக்கிறார்கள். கானா, துனீசியா, அங்கேனாலா, பபுவா நியூகினியா, மியான்மார் போன்ற நாடுகளில் இதனைச் செய்திருக்கிறார்கள் என்றார்.
இதேவேளை, இந்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட நாடாளு மன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, இந்தத் தருணத்தில் நான்கு அல்லது ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவும் வாய்ப்புகள் இருப்பதாகத் தெரி வித்துள்ளாா்.
இதேவேளை, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் நேற்று மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். மலை யக மக்கள் முன்னணியின், இராதாகிருஸ்ணனும், மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரும், மகிந்தவின் பக்கம் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன.
சிறிலங்காவின் தற்போதைய பரபரப்பான அரசியல் நிலவரங்கள் குறித்து ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், கரிசனை வெளியிட்டுள்ளார். அத் துடன், அரசியலமைப்பு விதிகளை பின்பற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.
இது தொடர்பாக, ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர், ஸ்டீபன் டுஜாரிக் அறி க்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவின் பிந்திய நிலவரங்களை, ஐ.நா பொதுச்செயலாளர் பாரிய கரிசனையுடன் கவனித்து வருகிறார்.
ஜனநாயக பெறுமானங்களை மதிக்குமாறும், அரசியலமைப்பு விதிகளையும், செயல்முறைகளையும் பின்பற்றுமாறும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப் படுத்தி, அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் சிறிலங்கா அரசாங்கத்தை நாடுகின்றாா்.
அனைத்து தரப்பினரும், கட்டுப்பாட்டுடனும், நெருக்கடியான நிலைக்கு அமை தியான முறையில் தீர்வு காணுமாறும் அவர் கோருகிறார்” எனத் தெரி வித்துள்ளாா்.