Breaking News

பாடசாலைக் காணியிலுள்ள இராணுவம் வெளியேற வேண்டும் - கோடீஸ்வரன்

அம்பாறை மாவட்ட திருக்கோவில் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செய லாளர் பிரிவுகளில் உள்ள பாடசாலைகளின் காணிகளிலிருந்து இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டுமெனத் தெரிவித்த பாராளுமன்ற உறு ப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், திருக்கோவில் பிரதேசத்தில் நடைபெறும் இல்மனைட் அகழ்வினையும் தடுக்க நடவடிக்கை வேண்டுமென்று ஜனாதிப தியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமனற் கட்டடத் தொகுதியில் நேற்று மாலை நடைபெற்ற ஜனாதி பதி தலைமையிலான விசேட செயல ணிக் கலந்துரையாடலில் ஜனாதிபதி யிடம் தெரிவித்துள்ளாா்.

இக் கூட்டத்தில் வடகிழக்கு அமைச் சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முப்படை களின் பிரதானிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்துள்ளனா்.

கோடீஸ்வரனின் கோரிக்கையை செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இல்மனைட் அகழ்வு விடயம் தொடர்பில் கடலோர சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வினவியோது அவர்கள் இது தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாதெனத் தெரிவித்துள்ளனா்.

இந் நிலையில் ஜனாதிபதி அவர்களிடம் இதனை உடனடியாக தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்துடன் எதிர்வரும் 08 ஆம் திகதி பாராளுமன்ற கோடீஸ்வரின் கோரிக்கைகளுக்கு சிறந்த தீர்வை வழங் குவதாகத் தெரிவித்துள்ளாா்.