Breaking News

ஜேர்மன் ஊடாக இலங்கை 2019 இல் பிரேரணை ஜெனிவா விவகாரத்தில் நகர்வுகள் தீவிரம்.!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் எதிர் வரும் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 22 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில் இலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணையை கொண்டு வரப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது பிரிட்டன் இப் பிரேரணையை 2019ஆம் ஆண்டில் கொண்டுவரலாமென எதிர் பார்க்கப்படுகின்ற நிலையில் அதற் கான இராஜதந்திர முயற்சிகளும் நடைபெறுவதாக தகவல்கள் கசிந் துள்ளன

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ள நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது பிரிட்டன் இப் பிரேர ணையை கொண்டு வரலாமென எதிர்பாா்க்கப்படுகின்றது.

குறிப்பாக ஜேர்மன் இலங்கை குறித்த பிரேரணையை கொண்டு வருவதில் முன்னின்று செயற்படுமென எதிர்பார்க்கப்படுவதுடன் இது தொடர்பில் ஜேர் மன் எவ் விடயத்தையும் இதுவரை முன்வைக்கவில்லை.

விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறு ஐரோப்பிய ஒன்றிய நாடு கள் அல்லது பிரிட்டன் இலங்கை குறித்த பிரேரணையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தியவாறு உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான பேச்சு வார்த்தைகளை எதிர்வரும் மாதங் களில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கலாமென தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோ, பிரிட்டனோ இதுவரை இதுதொடர்பில் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த 2012,2013, 2014, 2015 ஆகிய ஆண்டு களில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை அமெரிக் காவே முன்னின்று கொண்டுவந்தது.

அதாவது அமெரிக்கத் தலைமையிலான நாடுகளே இந்தப் பிரேரணைகளை கொண்டுவந்தன. எனவே 40ஆவது கூட்டத் தொடரில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசாங்கததின் இணை அனுசரணையுடன் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இப் பிரேரணை கடந்த 2017 ஆம் ஆண்டில் மீண்டும் இரண்டு சர்வதேச மேற் பார்வைக்கான கால அவகாசத்துக்கு உட்பட்டது. அந்த கால அவகாசம் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைகின்றது.

2015 ஆம் ஆண்டு பிரேரணையில் 20 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு;ள்ளன. காணாமல் போனோர் அலுவலகம் உணடமையை கண்டறியும் ஆணைக்குழு இழப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றை நிறுவ வேண்டுமென இந்த பிரேரணை யின் பரிந்துரைகள் வலியுறுத்தியுள்ளன.

அதேபோன்று பொது மக்களின் காணி விடுவிப்பு அரசியல் தீர்வுத்திட்டம் உள் ளிட்ட 20 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனினும் இதுவரை அரசி யல் தீர்வு காணப்படவில்லை.

ஆனால் காணாமல் போனோர் அலுவலகம் நிறுவப்பட்டு தற்போது இயங்கி வருவதுடன் அதன் இடைக்கால அறிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று இழப்பீட்டு அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டம் பாராளுமன் றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அத்துடன் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான பணிகள் முன்னெ டுக்கப்பட்டு வருவதுடன் அதன் வரைபு பாராளுமன்றத்தில் விரைவில் முன் வைக்கப்படுமென எதிர்பாா்க்கப்படுகின்றது.