Breaking News

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பிக்கவுள்ள அனந்தி சசிதரன்.!

எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் வடமாகாண சபை கலையவுள்ள நிலையில் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார்.  

தமது கொள்கையுடன் இணைய விரு ம்பும் அனைவருக்கும் அவர் அழைப் பும் விடுத்துள்ளார். வடமாகாண சபை யின் பதவிக்காலம் இம்மாதம் 25 ஆம் திகதி யுடன் முடிவாகவுள்ளது.

இந்நிலையில் வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன் தமது புதிய கட்சி குறித்து அறிவிப்பு விடுத் துள்ளார். ஈழத் தமிழர் சுயாட்சிக் கழ கம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தமது கொள்கையுடன் இணங்கி செல்கின்ற பலர் தம்முடன் இணையவுள்ளதாகவும்  தெரிவித்துள் ளார்.

தமிழ் மக்களின் நலன் விரும்பும் அரசியல் களம் ஒன்று அழிந்து செல்கின்ற காரணத்தினால் ஜனநாயக ரீதியாக தாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வும் மக்களின் நம்பிக்கையை வென்ற அரசியல் தளம் ஒன்றினை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள அவர் விரைவில் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் வெளியிடப்படுமெனத் தெரிவித்துள்ளாா்.

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனந்தி சசிதரன் தமிழரசு கட்சியின் யாப்பினை மீறி செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கட்சியில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவர் புதிய கட்சியை உருவாக்கும் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.