Breaking News

மகிந்த ராஜபக்ச தரப்புடன் தொடர்புகளை ஏற்படுத்த இந்தியா தீவிர முயற்சி.!

இலங்கையின் புதிய பிரதமராக பதவி யேற்றுள்ள மகிந்த ராஜபக்சவுடன் இராஜ தந்திர அரசியல் தொடர்புகளை ஏற் படுத்துவதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக என்டிரீவி தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்சவின் மீள்வருகையை எதிர்பார்க் காத இந்தியா இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களிற்கு பின்னர் மகிந்தவுடன் தொட ர்பை ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக என்டிரீவி தெரிவித்துள் ளது.

சிறிசேனவின் நடவடிக்கை காரணமாக மகிந்த ராஜபக்ச மீள அதிகாரத்தை கைப்பற்றியுள்ளமை இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது குறித்த கவலையை இந்தியாவிற்கு ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித் துள்ளது.

இந்திய இராஜதந்திரிகள் மகிந்த ராஜபக்ச தரப்பினருடன் தொடர்பு கொண்டுள் ளனர் என தெரிவித்துள்ள புதுடில்லி தகவல்கள் மகிந்த ராஜபக்சவின் நிய மனம் அரசமைப்பிற்கு உட்பட்டதாகவுள்ள பட்சத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற தயார் என குறிப்பிட்டுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்தியாவின் ஆர்எஸ்எஸ் அமைப்பு மகிந்த ராஜபக்ச தரப்பின ருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் உறவுகளை வலுப்படுத்த முயல்வதாக வும் இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் சேசாத்திரி சாரி புதிய தலைமைத்துவத்தின் கீழ் இலங்கையும் இந்தியாவும் சிறந்த உற வுகளை ஏற்படுத்த பாடுபடும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மாறியுள்ள பூகோள அரசியல் சூழ்நிலைகளில் நாங்கள் எங்கள் தேசிய நலனை பாதுகாப்பதற்கு யதார்த்த பூர்வமாகயிருக்க வேண்டும் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.