Breaking News

மூன்று வருடங்களாக சிறையில் வாடும் பிள்ளையான்.!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தனை (பிள்ளையான்) கைது செய் யப்பட்டு சிறையில் மூன்று வருடங்கள் கடந்துள்ளன. 

சி.சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் பூர்த்தியடையும் நிலையில் அவரின் விடுதலை வேண்டி வாவிக்கரை வீதியிலுள்ள முருகன் ஆலயத்தின் விசேட பூஜை கள் நடைபெற்றன.

2005ஆம் ஆண்டு நத்தார் ஆராதனையின் போது தேவாலயத்தில் வைத்து முன் னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜ சிங்கம் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள் ளாா்.

சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன் 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் கைது செய்யப்பட்டு மூன்று வருடங்கள் கழிந்துள்ள நிலையில் இவரது விடுதலை குறித்த எதிர்பார்ப்புடன் அவரது கட்சி ஆதரவாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.