ஜனாதிபதிக்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் அவசர சந்திப்பு!
சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கும் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்றைய தினம் அவசர சந்திப்பு நடைபெறவுள்ளது.
சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறி சேனவினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமையவே இச் சந்திப்பு நடைபெறவுள்ள தாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளாா்.
இதன்போது என்ன விடையங்கள் பேசப் படப்போகின்றன என்பது குறித்து அவர் எத் தகவல்களையும் கூறவில்லை. எனினும் ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக நீக்கிவிட்டு அநப் பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நியமித்த மைத்ரிபால சிறிசேன, மஹிந்தவிற்கு நாடாளுமன்றத்தில் தேவைப்படும் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதற்காக ஏனைய கட்சிகளின் ஆதரவை திரட்டும் முயற் சியில் ஈடுபட்டுள்ளாா்.
இதற்கமையவே நாட்டின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை அழைத்து அவர்களின் ஆதரவை கோர தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்தமை அரசியல் சாசனத்திற் கும் ஜனநாயகத்திற்கும் முரணான நடவடிக்கை என பகிரங்கமாக குற்றம் சாட்டிவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மைத்ரி – மஹிந்த கூட்டணியின் இந்த ஜனநாயக விரோத செயலை தோற்கடிக்க வேண்டுமென சூளுரைத் துள்ளது.
அதேவேளை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்த மைத்ரியின் நடவடிக்கைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் கடும் கண்டனத்தை வெளியிட்டிருப்பதுடன், நாடாளு மன்றத்தை கூட்டுமாறும் வலியுறுத்தியுள்ளனா்.
இந்த நிலையில் இன்றைய தினம் மைத்ரியுடன் இடம்பெறும் சந்திப்பில் பங் காளிக் கட்சிகளின் தலைவர்கள் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் தேசி யக் கூட்டமைப்பின் சார்பில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியி ருந்தனர். எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சுரேஷ் பிறேமச் சந்திரன் தலைமையிலான ஈ.பீ.ஆர்.எல்.எப் கட்சி வெளியேறியதை அடுத்து அந்தக் கட்சியின் உறுப்பினரான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தனித்து செயற்படுகின்றார்.
இந்த நிலையில் கடந்தவாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மற்றுமொரு பங்காளிக் கட்சியான தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான புளொட் கட்சியின் உறுப்பினரான மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் மைத்ரி – மஹிந்த அரசாங்கத்தில் இணைந்து கொண்டு பிரதி அமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார்.
இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எண் ணிக்கை தற்போது 14 ஆக குறைந்துள்ளனா் எனினும் இன்னமும் சிறிலங்கா வின் பிரதமர் யார் என்பதை நாடாளுமன்றில் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பே உள்ளதெனத் தெரிவாகியுள்ளது.