Breaking News

113 எம்.பீ க்களுடன் ஜனாதிபதியை சந்திக்க தயாராகியுள்ள ஐ.தே.க.!

சிறிலங்கா அரச தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை 113 நாடா ளுமன்ற உறுப்பினர்களுடன் நேரில் சந்திக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றில் பெரும்பான்மைப் பலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக் கின்றது என்பதை நேரில் ஜனாதிப திக்கு காண்பிப்பதற்காகவே113 நாடா ளுமன்ற உறுப்பினர்களுடன் நவம்பர் 19 ஆம் திகதி திங்கட்கிழமை முற் பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயல கத்திற்கு செல்லத் திடடமிட்டிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரி நியமித்த மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத் திற்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லையென இரண்டு தடவைகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அஜீத் பீ பெராரா தெரிவித்துள்ளார்.

மைத்ரிபால சிறிசேனவினால் ஒக்டோபர் 26 ஆம் திகதி பிரதமராக நியமிக் கப்பட்ட மஹிந்தவும், அதனைத் தொடர்ந்து ஒக்டோபர் 29 முதல் நவம்பர் ஒன் பதாம் திகதி வரை நியமிக்கப்பட்ட அவரது அமைச்சரவைக்கும் எதிராக நாடா ளுமன்றில் இரண்டுதடவைகள் நம்பிக்கையில்லாப் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன.

எனினும் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியா தென மஹிந்தவும் அவரது தரப்பினரும் அறிவித்துள்ள நிலையில், ஜனாதிப தியும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களை நிராகரித்துள்ளாா். 

இந்த நிலையில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சி களின் பிரதிநிதிகளையும் நவம்பர் 18 ஆம் திகதியான நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து ஜனாதிபதி மைத்ரி கலந்துரையாடிய போது,

இந்த விடையங்கள் தொடர்பில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜீத் பீ பெரேரா தெரிவித்துள் ளாா்.

சபாநாயகரின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தியோ அல்லது குற்றச் சாட்டுக்களோ இருப்பினும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் அவற்றுக்கு எதிராக மஹிந்தராஜபக்ச தரப்பே யோசனை யொன்றை நாடாளுமன்றில் முன்வைக்க வேண்டுமென பெரேரா சுட்டிக் காட் டியுள்ளார்.

அதனை விடுத்து ஐக்கிய தேசியக் கட்சியால் தாங்கள் நிறைவேற்றிய தீர் மானத்திற்கு எதிராக தீர்மானமொன்றை கொண்டுவர இயலாது எனத் தெரி வித்துள்ளாா்.

ஆனால் மஹிந்த தரப்பிற்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாததன் காரணத்தால் அவர்கள் நம்பிக்கை தீர்மானமொன்றையோ அல்லது நம்பிக் கையில்லாத் தீர்மானங்களுக்கு எதிரான யோசனைகளையோ கொண்டு வர மாட்டார்கள் என்றும் அடித்துக்கூறும் அஜீத் பீ பெரோா, மஹிந்த அணிக்கு குறைந்த பட்சம் 100 உறுப்பினர்களின் ஆதரவும் இல்லையெனத் தெரிவித்துள் ளார்.

இந்த நிலையில் இலத்திரனியல் வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும், பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி புதிது புதிதாக கருத்துக்களை கூறி வருவதாகவும் குறிப்பிட்டு விசனம் வெளியிட்ட ஐக்கியதேசியக் கட்சியின் முக்கியஸ்தர் பெரரோ,

நிறைவேற்று அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதிக்கு அரசியல் சாசன அதிகார சபையான நாடாளுமன்றவிவகாரங்களில் தலையிட உரிமை இல்லை என வும் அதேபோல் நீதிமன்ற விவகாரங்களிலும் ஜனாதிபதி மூக்கை நுழைக்க முடியாதெனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சடடவிரோதமாக பிரதமர் என்று தொடர்ந்தும் கூறிக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்சவும், அமைச்சர்கள் என்று கூறிக்கொண்டி ருக்கும் அவரதுவிசுவாசிகளும் அரசியல் சாசனத்திற்கும்.

சட்டத்திற்கும் விரோதமாக தொடர்ந்தும்செயற்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். அதாவது அரசியல் சாசனத்தின் 48 சரத்தின் இரண்டாவது பிரி விற்கு அமைய நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகரால்அறிவிக்கப்பட்டதுடன் பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவையின் பதவி முடிவுக்குவந்தவிடும்.

அதற்கமைய மஹிந்த மற்றும் அவரது தரப்பினரின் பதவிகள் நவம்பர் 14 ஆம்திகதி ஜே.வி.பி யினரால் கொண்டுவரப்பட்டுஐக்கிய தேசியக் கட்சி, அதன் பங்காளிக் கட்சிகள், தமிழ்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் அவர்களது அரசாங்கத்தின் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டதாக அஜீத் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.

‘ஆனால் அவர்கள் பதவியை இழந்துவிட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்துவருவதாலேயே நாட்டில் தொடர்ந்தும் அரசியல் குழப்பம் நீடித்து வரு கின்றது”என்றார் அவர். நாடாளுமன்றத்தில் சபாநாயகர் எடுக்கும் தீர்மானங் களை ஜனாதிபதி சவால் விடுக்க முடியாது.

ஆனால் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் மஹிந்த ராஜபக்சவிற்கும் பொது ஜனபெரமுன மற்றும் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சவால் விடுக்கமுடியும்.

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியால் சபாநாயகரின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்த முடியாது என்பதை 76 ஆவது நிலையியற் கடடளைச் சட்டம் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றது” என்பதை நாம் மிகத் தெளி வாக ஜனாதிபதியுடனான சந்திப்பில் எடுத்துரைத்தோம்என்றும் அஜீத் பீ பெரேரா தெரிவித்துள்ளாா்.

எனினும் தற்போது எழுந்துள்ள பிரச்சனைக்கு எந்தவொரு முடிவும் எட்டப் படாது கூட்டம் நிறைவு பெறுவதற்கு முன்னதாக அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நாடாளுமன்றில் 113 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கின்றது என்பதை நிரூபிக்கமுடியுமா என்று ரணில் விக்கிரமசிங்கவைப் பார்த்து வினவியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அதனை செய்யத் தாங்கள் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கமையவே நாளைய தின் 113 க்கும் மேற்பட்டநாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று அவர்களின் சத்தியக் கடதாசிகளையும் ஜனாதிபதியிடத்தில் கையளி க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அஜீத்பீ பெரேரா தெரிவித்துள்ளாா்.

இதனால் இனீமேலும் அடம்பிடிக்காது ஜனாதிபதி அரசியல் சாசனத்தில் அவருக்கு இருக்கும் கடப்பாட்டை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பை விடுப்பதுடன், பிரதமரை நிய மித்த அமைச்சரவையும் நியமிப்பதன் ஊடாகவே நாடு எதிர்நோக்கியுள்ள மோசமான நெருக்கடியில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் காப் பாற்ற முடியும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியிருக்கின்றது.

அதனால் இனியும் தாமதிக்காது அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காண ஜனா திபதி முன்வருவார் என்று தாம் நம்பவதாகவும் தெரிவித்த அஜீத் பி பெரேரா, ஜனாதிபதி அழைத்தால் நாளை காலை பத்து மணிக்கு சென்று ரணி்ல் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெருமபான்மை பலம் இருக்கின்றது என்பதை அவர்முன்னிலையிலேயே நிரூபிப்போம் என மேலும் தெரிவித்துள்ளார்.

இவேளை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மஹிந்தவிற்கு ஆதரவு அளிப் பதாக கூறி மஹிந்த அணிக்கு தாவிய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தசேனாநாயக்க மற்றும் பதுளை நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் ரணிலுக்குஆதரவு தெரிவிக்க முன்வந்ததுடன்,

மஹிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கும்ஆதரவாக வாக்க ளித்தனர். அதேவேளை மஹிந்தவை பிரதமராக நியமித்த மைத்ரியின் நட வடிக்கையால் அதிருப்தியடைந்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர்களான மனுஷ நாணயக்கார,

ஏ.எச்.எம்.பௌசி, பியசேன கமகே ஆகியோரும் கடந்த 14 ஆம்திகதி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொண்டனர். இவர்களும் மஹிந்தவிற்கு எதி ரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இவர்களுக்கு மேலதிகமாக சுதந்திரக் கட்சியிலிருந்து மேலும் சில நாடாளு மன்ற உறுப்பினர்கள் மைத்ரி – மஹிந்த கூட்டணியின் அரசியல் சாசனத் திற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமான நடவடிக்கைகளால் அதிருப்தி யடைந்த நிலையில் ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க முன் வந் துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தவாறு உள்ளது.

- நன்றி ஐ.பி.சி இணையத்திற்கு -