இராணுவத்தினரால் கொல்லப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களிற்கு அஞ்சலி.!
வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் இராணுவத்தினரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலின்போது இராணுவத்தி னர் திருப்பித்தாக்கியதில் விவசாய கல்லூரி வளவில் கற்றல் நடவடிக்கை மேற்கொண்டிருந்த ச.கிந்துஜன், சி.கோபிநாத், இரா.அச்சுதன், ஆர்.மொகமட், தி.சிந்துஜன் ஆகிய ஜந்து மாணவர்கள் உயிரிழந்தனர்.
இவர்களின் நினைவு தினம் வருடா வருடம் விவசாய கல்லூரியில் நடைபெற்று வருவ துடன் குறித்த மாணவர்களின் நினைவாக மரநடுகை, இரத்ததானம், தாகசாந்தி போன்ற சேவை களை விவசாயக்கல்லூரி மாணவர் கள் குறித்த நினைவு தினத்தில் மேற் கொண் டுள்ளனா்.
அந்த வகையில் 12 ஆவது நினைவேந்தல் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று (18.11) நடைபெற்று இந் நிகழ்வில் தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரி அதிபர், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், உயிரிழந்த மாண வர்களின் உறவினர்கள், பழைய மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு உயிரிழந்த மாணவர்களின் படத் திற்கு சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளாா்கள்.
இம் மாணவா்களிற்கு எமது இணையம் சாா்பிலும் எமது இதய அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.