Breaking News

அதிகார மிளகாய்த்தூள்! மகிந்தவாதிகளின் அரசியல் கஜா புயல்.!!

இலங்கையின் வடக்கே நகர்ந்த கஜா சூறாவளி அந்த தீவை மரணபயத்தில் பெரிதும் அச்சுறுத்தாமல் கடந்தாலும் அதிகாரத்தை கைவிட மறுத்து விடாது கறுப்பு என்ற அடையாளத்துடன் அந்தத்தீவில் சுழலும் அரசியல் சூறைக் காற்று இன்றும் தனது சொந்த நாடாளுமன்றத்தையே சூறையாடியுள்ளது.

பெரும்பான்மை பலம் இல்லாத தமது தரப்பு பலவீனத்தை மறைப்பதற்காக அச்சூறாவளி கடந்த 2 நாட்களைப் போலவே நாடாளுமன்றத்தில் அழிச் சாட்டிய அமளி துமளிகளை செய்தது.

நாடாளுமன்றத்தின் கையேட்டுப் புத் தகங்களை ஆயுதங்களாக்கி வீசியெ றிந்தது. குழப்பங்களை அடக்க வந்த காவற்துறையினர் மீதும் ஒரு சில தர்ம அடிகளை கொடுத்தது.

 சபாநாயகரின் அக்கிராசனத்தை ஆக்கிரமித்து தனது தரப்பு சண்டியர் அருந்திக பெர்னாண்டா என்ற துதிபாடியை அதில் அமரவைத்து ஜனநாயகத்தை துச்ச மென மிதித்த அந்தசக்தி ஒரு கட்டத்தில் மிளகாய்த்தூள் தாக்குதலைக் கூடச் செய்தது.

அதாவது அதிகாரத்தை தக்கவைக்க நடத்தப்பட்ட அதி –“காரம்” மிகுந்த தாக் குதலாக இது பதிவானது விடாது கறுப்பு தரப்பு அமர்ந்திருந்த திசையில் இரு ந்து வந்த இந்த-“காரம்” மிகுந்த தாக்குதலுக்கிலக் கான மலிக்சமரவிக்ரம காமினி ஜெயவிக்ரம போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிளகாய்தூள் கரை சல் தோய்ந்த மேனியராக பரிதாபகரமாக காட்சியளித் துள்ளனா். 

பின்னர் எரிச்சலுற்ற தமது கண்களுக்கு சிகிச்சை பெற நாடாளுமன்ற வைத்தியசாலைக்கும் விரைந்தனர். தமக்குரிய கண்கண்ட அரசியல் பிரதி நிதிகள் என சிங்கள மகா ஜனதாவால் தெரிவுசெய்யப்பட்டு அனுப்பட்டவர்களால் கண்ணெரிச்சல் பட்ட கதை இது.

இந்தக் கண்கெட்ட காட்சியைக்கண்டு நாடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் இருந்த பார்வையாளர்களே கூக்குரல் எழுப்பியதைக்கூட அவதானிக்க முடிந் தது.

இந்தளவுக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கத்திகளுடன் காணப் பட்டதால் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடும் பாதுகாப்பு பரிசோதனைகளின் பின்னர்தான் அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப் பட்டதாக வேறு சொல்லப்பட்டது.

ஆயினும் இக்குழப்பங்களுக்கு மத்தியில் கவச குண்டலங்களை இழந்த கர் ணன் போல தனது அக்கிராசனத்தையும் மகிந்தாவாதிகளிடம் இழந்து இருப் பதற்கும் முறையான ஆசனம் இல்லாமல் நின்றாலும் விடாக் கண்டனாக செயற்பட்ட சபாநாயகர் கருஜயசூரிய மகிந்தவுக்கு எதிராக,

மூன்றாவது முறையாகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்க அனு மதித்தார். அதில் வெற்றியடைந்தாகவும் அறிவித்துள்ளாா்.

ஆக மொத்தம் தமிழினத்துக்கு எதிராக தரப்படுத்தல் முதல் முள்ளிவாய்கால் பேரழிவு வரை எத்தனையோ நாசகாரம் மிகுந்த சட்டவாக்கங்களை பிறப்பித்த அதேஅரங்கில் கடந்த 3 நாட்களாக இடம்பெற்றுவரும் தாக்குதல்கள் போருக் குப்பின்னான இலங்கையில் ஒரு முக்கிய பதிவாகமாறியுள்ளது.

ஆனால் இந்த அரசியல் குழப்பங்களுக்கு எல்லாம் காரணமான சூத்திரப் பாத் திரத்தில் இருக்கும் மைத்திரியோ இந்த பதிவு எழுதப்படும் வரை இந்த ஆட் டத்தில் முறையான நகர்வுகள் எதனையுமே செய்யவில்லை.

ரணில் என்ற பிள்ளையையும் கிள்ளிவிட்டு மகிந்த என்ற தொட்டிலையும் ஆட்டிவிடும் காரியத்துக்கு ஒப்பான நகர்வுகளை செய்யும் அவர் இதுவரை ஜனநாயகரீதியான பதில்களை வழங்காதது ஏன் என்பதும் இங்கு ஒரு வினா.

 எது எப்படியோ நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதிஅதாவது எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைபலத்துக்குரியவர்களை அங்கீ கரித்து அதற்கேற்ப மைத்திரி நகர்வுகளை எடுக்காமல் விட்டால் அல்லது மகிந்தவே தானாக பதவி விலக்காமல் விட்டால் எதிர்வரும் திங்கட் கிழமை யும் இவ்வாறான நகர்வுகள் நடைபெறாதது என்பதற்கு உத்தரவாதம் ஏதும் இல்லை.

நாடாளுமன்றத்தின் தற்போதைய அமர்வை, எந்தவொரு காரணத்துக்காகவும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டேனென சமுகவலைத்தள ஊடகமான ருவிற்ரறில் ருவிற்றுவதால் மட்டும் மைத்திரிபால சிறிசேனா நாட்டை பரி பாலனம் செய்யமுடியாது.

இதனைவிட அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுவதாகவும் அதற்குரிய கௌரவத்தினை அளிப்பதாகவும் ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு மைத்திரி நேற்று உறுதி வழங்கியிருக்கிறார். 

ஆனால் இப்பதிவு எழுதும் வரை சிங்கள மக்களை பொறுத்தவரை படித் தவன் பாட்டைவிளங்கவில்லை. எழுதியவன் ஏட்டை மதிக்கவில்லை இங்கு பாட்டை படித்ததாகவும் ஏட்டை எழுதிய பாத்திரமாகவும் சிறிலங்கா அரச தலைவரே உள்ளாா்.

அது சரி சிறிலங்கா ஜனநாயக சோசலிச குடியரசு என்ற அடையாளத்தில் முறையான மக்களாட்சி அல்லது ஜனநாயகம் இருக்கிறதா? ஏனெனில் அந்தத் தீவில் வாழும் இன்னொரு தேசிய இனத்துக்கு அப் பாக்கியதை இல்லையென் பது நிருபிக்கபட்டுத்தான் பல தசாப்தங்கள் ஆகிவிட்டன.