ஜனாதிபதியுடனான சந்திப்பை மறுத்தாா் சபாநாயகர்.!
பாராளுமன்றத்தை பிரதி நிதிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சியின் தலை வர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நடைபெறவுள்ள சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை சபாநாயகரின் ஊட கப் பிரிவு அறிவித்துள்ளது. பாராளு மன்றத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்கு பற்றுதலுடன் சர்வகட்சி சந்திப் பொன்று இன்று மாலை 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற அரசியல் அமைதி யின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிக ளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி யினால் இச் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளி னதும் தலைவர்களுக்கும் இச் சந்திப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரியவுக்கும் ஜனாதி பதியினால் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.
இந் நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த அழைப்பினை சபாநாயகர் புறக் கணித்துள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.