Breaking News

நாடாளுமன்றம் கூடுகையில் வாக்கெடுப்பு நடத்தப்படுமா..?

சிறிலங்கா நாடாளுமன்றம் கூட்டப்பட்டதும் யாருக்கு பெரும்பான்மைப் பலம் இருக்கின்றது என்பதை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படுமென ஐக் கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளமன்றம் கூட்டப்படும் நவம்பர் 14 ஆம் திகதி ஜனாதிபதியின் கொள் கைப் பிரகடன உரை மாத்திரமே நடைபெறுமென மைத்ரி – மஹிந்த அணியினர் கூறிவரும் நிலையி லேயே ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜீத் பீ பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

"நாடாளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சபாநாயகர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். 14ஆம் திகதி நிச்சயமாக வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படும். நாடாளு மன்றத்தில் பெரும்பான்மை பலம் யாருக்கு இருக்கின்றது என்பதை அறிவதற் காகவே இந்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்ற போதிலும் நாடாளு மன்றத்தின் நிகழ்ச்சி நிரல், ஒழுங்குப் பத்திரம், நிர்வாகம் உட்பட அனைத்து விடயங்களையும் சபாநாயகரு தீர்மானிக்க முடியும்.

அவருடைய கட்டளைகளை நாடாளுமன்ற செயலாளர் உட்பட அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். 14 ஆம் திகதி சபை கூட்டப்பட்டவுடன் முன்வைக்கப்படு கின்ற ஒழுங்குப் பத்திரத்தின் ஊடாக அன்றைய நடவடிக்கைகள் நடைபெறும்.

அன்று நடைபெறும் நிகழ்வு தொடர்பாக ஒழுங்குப் பத்திரம் முன்வைக்கப்ப டும். அதற்காக சில நிலையியற் கட்டளைச் சட்டங்களை மாற்றுவதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை யாருக்கு இருக்கிறது என்பது தொடர்பாக வாக்கெடுப்பும் நடத்தப்படும். எனவே இந்தப் பிரச்சி னைக்கு தீர்வைப் பெற்றுவிட்டே நாங்கள் அங்கிருந்துதிரும்புவோம் என்றார்.

எனினும் ஸ்ரீலங்காவின் பிரதமர் யார் என்கிற குழப்பநிலைக்கு 14 ஆம் திகதி கூட்டப்படும் நாடாளுமன்றத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படாது என்று தெரிவித்துவரும் மைத்ரி – மஹிந்த கூட்டணி அன்றைய தினம் நாடாளுமன் றில் அரச தலைவரின் கொள்கைப் பிரகடன உரை மாத்திரமே நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட மாட்டாதென்றும், அதற் கான அவசியமும் பிரதமர் மஹிந்தவிற்கு இல்லையெனவும் மைத்ரி – மஹிந்த அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.