Breaking News

7 பேர் விடுதலை தொடா்பாக ஆளுநரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.!

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நெடுநாட்களாக சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடு தலை செய்யக்கோரி ஆளுநருக்கு பரிந்துரைத்திருந்தது தமிழக அமைச் சரவை.

ஆனால், அமைச்சரவையின் இப் பரிந் துரையானது கிடப்பில் போடப்பட் டுள்ளதாகவே காணப்படுகின்றது. அதே சமயம், கடந்த 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற தருமபுரி பஸ் எரிப்பு சம்ப வத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான அதிமுகவினர் மூன்று பேரை நேற் றைய தினம் அமைச்சரவையின் பரிந் துரையின் பேரில் விடுவித்துள்ளது சிறைத்துறை.

சுமார் 3 மருத்துவ மாணவிகளின் உயிரை பறித்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்ற வாளிகளுக்கு தங்களது கட்சியினர் என்ற முறையில் கருணை காட்டும் அரசு 7 பேர் விடுதலை விவகாரத்தில் அக்கறை காட்டவில்லை என்ற குற்றச் சாட் டுகள் எழுந்தது. இந்நிலையில், மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித் துள்ளார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம். " 7 பேர் விடுதலை விவகா ரத்தில் ஆளுநர் மாளிகையிலிருந்து எங்களுக்கு சரியான பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. அதேசமயம், தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விடுவித்தது சட்டத்தின் வழியாகவே நடைபெற் றது" என பதிலளித்துள்ளார்.