மைத்திரிக்கு மர்ம மனஉளைச்சல்! மேற்குலகில் மருந்து என்கிறார் சரத் !!
விறுவிறுப்பான திரைப்படம் ஒன்றில் கிளைமாக்ஸ் எனப்படும் முக்கிய இறுதிக்கட்டக்காட்சிக்காக எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு அதற்குமுன்னர் இடம்பெறக்கூடிய திருப்பங்கள் அற்ற காட்சிகள் ஈர்ப்பை ஏற்படுத்துவதில்லை.
இலங்கைத்தீவில் இருக்கிறது ஆனால் இல்லை என்ற ஒரு தோற்றப் பாட்டுடன் அரசாங்கமே இருக்கும் நிலையில் அதன் நாடாளுமன்ற அமர்வு குறித்த செய்திகளும் வெறும் “உள்ளேன் ஐயா”! பாணிச் செய்திக ளாக மாறி விட்டன.
ஆயினும் எல்லோரும் இப்போது நாடாளுமன்றக் கலைப்புத்தொடர்பாக சிறி லங்காவின் உச்ச நீதிமன்றம் வழங்கக்கூடிய கிளைமாக்ஸ் காட்சிக்காக காத்திருக்கின்றனர்.
நாளை மறுதினம் வரக்கூடிய இந்த கிளைமாக்ஸ் காட்சியின் பின்னணியில் உச்சநீதிமன்ற வளாகத்தை மகிந்தாவாதிகள் சுற்றிளைக்கப்போவதான செய்தி களும் இப்போது வெளியாகியுள்ளன.
அந்த வகையில் ஆட்சி அதிகாரம் தமது கைகளில் உள்ளதாக கூறும் தரப்பின் பிரசன்னம் இன்றி நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்ற இன்னொரு புதுமை நிலை இன்றும் சிறிஜெயவர்த்தனபுர வளாகத்தில் பதிவு செய்யப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற அடையாளத்தில் உள்ள மகிந்த மைத்திரி குழாம் நாடாளுமன்ற அமர்வுகளை தொடர்ந்தும் புறக்கணிப்பதற் காக காரணம் என்ன என்பது இத்தால் சகலரும் அறிந்தவிடயம்.
அதேபோல எதிரணி இல்லாவிட்டால் ஆடுகளமும் சுவாரசியப்படுவதில்லை யல்லவா? அந்தவகையில் தமது இன்றைய நாடாளுமன்ற நிகழ்ச்சிநிரலை மாற்றிய யானைகள் மேற்பார்த்த ஐக்கிய தேசிய முன்னணியும் சில உரை களுடன் நாடாளுமன்றத்தை எதிர்வரும் 12ம் திகதி வரை ஒத்தி வைத்தது.
அதாவது இனி நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் வேளை நாடாளுமன்ற கலைப்புத்தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்பு வந்துவிடும். இது தொடர்பான மனுக்கள்மீதான விசாரணை இன்று இரண்டாவது நாளாக சிறிலங்கா உச்சநீதிமன்றத்தில் அரங்கம் நிறைந்த ஹவுஸ்புல் காட்சியாக ஓடியது.
இன்று கௌரவத்தோற்றத்தில் தோன்றிய சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, நாடாளுமன்ற கலைப்புத்தொடர்பான மனுக்களை விசாரிப்பதற்கு உச்ச நீதி மன்றத்துக்கு அதிகாரமில்லை என அரிவாளை ஒரு போடாகப்போட்ட நகா்வும் நடந்தது.
அத்துடன் ஜனாதிபதி ஒருவர் நாட்டின் அரசியலமைப்பை மீறி இருந்தால் அது சம்பந்தமாக நாடாளுமன்றத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் அரசியலமைப்பின் 38(2) சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே எனக்கூறி சொதப் பினார்.
ஒருவேளை நாடாளுமன்றத்தால் நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் ஏன் நாடாளுமன்றத்தை ஒருங்காக நடத்த அரசதரப்பு எனக்கூறிக்கொள்ளும் தரப்பு விடுவதில்லை என்ற ஒரு வினா தொடக்கப்பட்டால்; சட்டம் தெரிந்த மா அதிபரின் பதில் என்னவாக இருக்கக்கூடும்?
மகிந்த மைத்திரி அணி ஒன்றில் நாடாளுமன்றத்தில் அடித்துக்கொண்டு கெடுக் கிறது. இல்லையெனில் புறக்கணித்து கெடுப்பது பகிரங்கமானது. இதற் கிடையே உச்ச நீதிமன்றத் தீர்ப்பு நாளை மறுதினம் வரவுள்ள நிலையில் ஒரு வாரகாலத்துக்குள் நாட்டின் அரசியல் நெருக்கடி நிலை முழுமையாக தீர்க்கப்படுமென மைத்திரி நேற்று வழங்கிய உறுதிமொழியையும் கொஞ்சம் அவதானிக்க வேண்டும்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் விஷேட மாநாட்டு அரங்கில் வைத்து தானே வழங்கிய இந்த உறுதிமொழியை அடுத்த வாரத்தில் அவரே மறுதலித்து அது ஒரு அரசியல்பேச்சு என சொல்ல மாட்டா ரென்பதற்கும் உத்தரவாதமில்லை.
2015 இல் மகிந்தவுக்கு எதிராக தானேசொன்ன ஆறடி குழி கதைக்கு இப்போது புதுவிளக்கம் வழங்கிய அவர்மஹிந்தவால் தனது உயிருக்கு ஆபத்துஇருந்தது என தெரிவித்தது வெறும் அரசியல்பேச்சு என சொல்லி அரசியல் விதூஷ கனானார்.
ஆனால் இவ்வாறு சில அரசியல் விதூஷக வித்தைகளை அவர் காட்டினாலும் ரணில்விக்கரமசிங்கவை ஒருபோதும் மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவ தில்லை என அவர் காட்டும் வன்மத்தின் பின்னணிதான் மர்மமாக உள்ளது.
இது மைத்திரியின் வெறும் ஈகோ எனப்படும் தன்னகங்கார நிலை சார்ந்த தாகவே நோக்கப்படுகிறது. ரணில் மீண்டும் பிரதமராக வந்தால் ஒரு நாளே னும் தான் அரசதலைவராக பதவி வகிக்கப்போவதில்லையென சொன்ன கரு த்தை நிலை நிறுத்துவதற்காக மட்டும் ரணிலுக்கு வாய்ப்பில்லை வாய்ப் பில்லை என அவர் கூறிய விடயம் இப்போது இப்போது அவருக்கு இயலாமை சார்ந்த மன உளைச்சலாவே மாறிவிட்டது.
இதனால் தான் தன்னை அதிகமாக நெருக்கினால், தனது அரசதலைவர் பதவியை துறந்துவிட்டு தனது பொலனறுவை விவசாய பண்ணைக்கு விவ சாயம் செய்ய சென்று விடுவேன்” என உணர்ச்சிவச பிளெக்மெயில் ரக தந் ரோபாயத்தை ஐக்கிய தேசிய முன்னணியின் முன்னாலேயே அவர் எடுத்து விடுகிறார்.
இது அவருக்குரிய கடும் மன உளைச்சல் நிலையைக்காட்டுகிறது. இதற்குரிய தீர்வாக அமெரிக்காக உட்பட்ட மேற்குலகில் மேற்கொள்ளப்படுவதைப்போல அரசதலைவராக பதவியேற்பவர்குறித்த உடல்நிலை மனநிலை ஆகிய முக் கிய விடயங்கள் இனிவரும்காலங்களில் கவனமெடுக்கவேண்டுமென சரத்பொன்சேகா கூறுகிறார்.
ரணில் ஏன் மீண்டும் பிரதமராக வரக்கூடாது என்பதற்காக காரணங்களை சிங் கள மஹாஜனதா ஏற்கக்கூடிய வகையில் தேசத்துரோகம் சார்ந்து அல்லது தன்னை கொலைசெய்துவிட்டு அரசதலைவர் ஆசனத்தை ரணில் பிடிக்கத் திட்டமிட்டதான சதிபோன்ற காரணங்களை மைத்திரி இதுவரை ஆதாரப்படுத் தவே இல்லை.
மாறாக உப்புச்சப்பிலாமல்தான் அதனை அடுக்கியிருக்கிறார். ரணில் நல்லாட் சியின் அரசியல் நோக்கத்தை நாசமாக்கினார். நாட்டை நாசமாக்கினார். ஐக்கிய தேசிய கட்சியையும் நாசமாக்கினார்.
என்னையும் நாசமாக்கினார் என அவர் அடுக்கும் காரணங்கள் யாவும் வெறும் அரசியல் குற்றச்சாட்டுக்களே. இவ்வாறான காரணங்கள் அல்லது கரணங்கள் அனைததுக்கும் தன்னிடம் இருந்த ஒரேயொரு நிவாரணி ரணிலை பிரதமர் கதிரையில் இருந்து துரத்துவதே என்றார்.
ஆனால் இதே குற்றச்சாட்டுக்களை ரணில் மைத்திரியை நோக்கித்திருப்பலாம் அவருக்கு அச்சொட்டாகப் பொருந்தும் அதிலும் ரணில் ஐக்கிய தேசிய கட்சியை நாசமாக்கியதாக அவர் கூறும் காரணத்தைவிட மைத்திரி சிறிலங்கா சுதந்திர கட்சியை நாசமாக்கியதாக ரணில் கூறக்கூடிய காரணங்கள் இன்னும் வலுவுள்ளதாகவே இருக்கும்.
ஆனால் ரணிலிடமுள்ள பலவீனங்களால் மைத்திரியால் இவ்வாறு உரத்து பேசி கைதட்டல் வாங்கமுடிகிறது. இதனைவிட நாட்டை பிரிக்காமல், காட்டிக் கொடுக்காமல், சமஷ்டி வழங்காமல் தமிழ்மக்களுக்கு வழங்க முடிந்த தீர்வு களை ரணில் வேண்டுமென்றே வழங்கவில்லை என மைத்திரி சொல்லி யிருப்பதையும் இங்கு அவதானிக்க வேண்டும்.
அதேபோல கிழக்கின் வவுணதீவில் சிறிலங்கா காவற்துறையினர் இருவர் கொலை செய்யப்பட்ட பின்னர் தமிழர் முற்றங்களை நோக்கி வெளிப்படும் புதிய ரூபங்களையும் இங்கு அவதானிக்கவேண்டும். ஆம் ரூபங்களும் அரூ பங்களும் தமிழ் மக்களுடன் வினையாட அல்லது விளையாடும் காலமாகவும் சமகாலம் இருப்பதாகவே உள்ளது.

- நன்றி ஐ.பி.சி இணையத்திற