Breaking News

அரசியல் நெருக்கடி! 14 முதல் நீதிமன்ற விடுமுறை!!-அப்போ தீர்ப்பு?

இலங்கைத்தீவில் நிலவும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் அனைத் துலக மனித உரிமை தினமும் (டிசம்பர் 10) அனைத்துலக மனித உரிமை பிர கடனத்தின் 70 ஆவது அகவை நாளும் கடந்தது.

இந்தமுறை டிசம்பர் 10 ஐப்பொறுத்த வரை அந்தத்தீவில் மனித உரிமைக ளுக்குரிய ஏறுமுகத்தை அறிந்து கொள்ளும் ஆவலைவிட சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பாக அதன் உச்சநீதிமன்றம் வழங்கக்கூடிய தீர்ப்பு எதுவாக இருக்கும் என்ற ஒருஎதிர்பார்ப்பே உள்ளது.

இந்த எதிர்பார்ப்பை இதுவரை நோக்கிய மைத்திரி கூட இப்போது இவ் விட யத்தில் ஒரு தீர்ப்பை வழங்குமாறு உச்ச நீதிமன்ற பிரதம நீதியரசரிடம் கோரி க்கை ஒன்றை விடுக்க தீர்மானித்து விட்டார்.

சட்டமா அதிபரின் ஊடாக நாளை இந்த கோரிக்கை ஜனாதிபதி முன்வைக் கப்பட உள்ளதாக தெரியும் பின்னணிகளுக்கு மத்தியில் தான் ஈழத்தமிழினம் இன்று மீண்டும் ஒருமுறை தமது தாயகப்பரப்பில் மனித உரிமை நாள் குறித்த கவனயீர்ப்புப் போராட்டங்களை நடத்தியது.

இவற்றில் விழிநீர் சொரிவுகளுக்கும் பேரணிகளுக்கும் மனு கையளிப்புக் களுக்கும் இடமிருந்தன. அந்த வகையில் வடமாகாணத்தின் ஜந்து மாவட்டங் களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் இதேபோல கிழக்கின் திரு மலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த உறவுகள் ஒன்றிணைந்து திருக்கோவில் பிரதேசத்தில் பேரணியை முன்னெடுத்தனர்.

ஆக மொத்தம் எத்தனையோ டிசம்பர் 10 இவ்வாறாக நீதிகோரப்பட்டுக்கழிந்த நிலையில் பத்தோடு பதினொன்றாக இன்றையும் டிசம்பர் 10 உம் கடந்தது. அரசியல் கையறு நிலையில் உள்ள தமிழ் மாந்தர்களால் இவற்றை விட வேறு எதனைத்தான் செய்ய முடியும்.

டிசம்பா 10 இல் நினைவு கூரப்படும் அனைத்துலக மனிதஉரிமைசாசனத்தை வரைந்த அமெரிக்காவின் முதற்பெண்மணி எலினோர் ரூஸ்வெல்ட் அம்மை யார் இன்று இருந்திருந்தால் தனது மனித உரிமை தீர்க்கதரிசனம் பொய்த் தமை குறித்து நிச்சயமாக நொந்து கொண்டிருப்பார்.

ஏனெனில் மனிதஉரிமைசாசனம் என்பது ஒரு ஒப்பந்தமல்ல எதிர்காலத்தில், இந்தச்சாசனம் உலக சுதந்திரத்துக்கான பெரும்பட்டயமாக உருவாக வேண்டு மென்பது எலினோர் ரூஸ்வெல்த்தின் கனவு தீர்க்கதரிசனமாக இருந்தது.

அமெரிக்காவில் பிறந்த அனைத்துலக மனித உரிமைசாசனம் இந்த உலகுக்கு பெரும்பட்டயமாக உள்ளதோ இல்லையோ நிச்சயமாக ஈழத் தமிழினத்துக்கு இந்த பட்டயநிலை இன்றுவரை சாத்தியப்படவேயில்லை.

இதற்குமாறாக இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைத் தீர்த்துக் கொள்வதற்கு அந்தத்தீவின் அரசியல் தலைகள் உடனடியாக நகர்வுகளை மேற்கொள்ள வேண்டுமென்ற அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸின் கருத்து தனியாகவும் அதேபோல நீதிமன்றங்களின் தீர்ப்புக்காரணமாக தான் இப்போது வேலை வெட்டியற்ற பிரதமராகிவிட்டேனே என்ற மஹிந்தவின் சலிப்பும்தான் இன்றைய நாளில் வந்திருக்கிறது.

2015 இல் இலங்கையில் இடம்பெற்ற ஆட்சிமாற்றம் நல்லாட்சியாகக்கடவது என மேற்குலகமும் தமிழர்களின் ஒருவகிபாக அரசியல்மையமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பும அதனை அனுமதித்தது.

ஆனால் இன்று அதே மைத்திரி –ரணில் ஜோடி நம்பர் 2 கவிழ்ந்து மீண்டும் மைத்திரி –மகிந்த ஜோடி நம்பர் 2 உருவாகியிருப்பதையும் தமிழர்கள் கண் ணாரக்கண்டார்கள்.

அதேபோல எதிர்காலத் தேர்தல்களை எதிர்கொள்ளவென மைத்திரி தலைமையில் மஹிந்தவின் பங்குகெடுப்பில் புதிய கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படும் தில்லாலங்கடிகளையும் அவர்கள் காண்கின்றனர். அதற்காக இன்று சிறிலங்கா பொதுஜனபெரமுன ஆகிய தாமரை மொட்டுடன் மைத்திரி சந்திப்பொன்றை நடத்தினார்.

கடந்த வாரம் மஹிந்த தலைமையில் தாமரை மொட்டு கலந்துரையாடியது. இந்த நிலையில் இன்று மைத்திரியின் முறை கடந்தது. இந்த நிலையில்தான் இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு என்ன தீர்வு என்ற வினா எதிரொலிக் கிறது.

எதிர்வரும் 14 ம் திகதி வெள்ளியன்று உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்காலம் ஆரம்பிப்பதால் சிறிலங்கா உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்போது வேண்டுமா னாலும் வெளிப்படும் என்ற நிலைமை உள்ளது.

உச்ச நீதிமன்றம் வழங்கும்தீர்ப்புஎதுவாக இருந்தாலும் அதனடிப்படையில் எதிர்காலஅரசியல்செயற்பாடுகளை முன்னெடுக்கப்போவதாக நேற்று சொன்ன மைத்திரி தற்போது நிலவும் அரசியல் நெருக்கடிகளுக்கு வெளிநாடு களின் தாக்கமே காரணம் எனவும் மேற்குல ஒவ்வாமையை வழமை போல வெளிப்படுத்தினார்.

மைத்திரியின் மேற்குல ஒவ்வாமைக்கு இடையில் விடுதலைப்புலிகளின் முன்னைய முக்கியமுகம் ஒன்றால் இலங்கையில் நடத்தப்படத் திட்டமிடப் பட்ட ஒருகொலை முயற்சி குறித்த புதிய குரல்பதிவுகளை 48 மணி நேரத்தில் வெளியிடப்போவதாக நாமல்குமாரவின் வத்தி வைப்புவந்துள்ளது.

நாமல்குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்டதான ஒலிப் பதிவுகளை மீளெடுப்பதற்கான குழு ஒன்று ஏற்கனவே ஹொங்கொங்குக்குப் பறந்தநிலையில் அவரது இந்த புதிய கதை வந்துள்ளது.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தாலும் அரசியல் குழப்பங்கள் தீருமா? என்பதில் கேள்விகள் உள்ளன. ஏனெனில் தொடர்ந்தும் புதிய புதிய வழக்குகள் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

மைத்திரியின் மனநிலை குறித்த ஐயத்தை எழுப்பும் மனு முதல் சபாநாய கரின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள்வரை பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே ரணிலைபிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு மஹிந்தவை பிரதமராக நியமிக்க மைத்திரி எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களையும் ஜனவரி 7 இல் விசாரணைக்கு எடுக்க உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது ஆக மொத்தம் இலங்கையின் அர சியல் நெருக்கடிக்கு என்ன தீர்வு என்ற வினாவுக்கு இதுவரை துல்லியமான விடையேதும் தெரியவில்லை.

ஆனால் அந்த்தீவின் இறங்குமுக நிலைமைக்கு மட்டும் தெளிவான அறி குறி கள் தெரிகின்றன. அதில் முக்கியமான இறங்குமுகம் பொருளாதார ரீதியி லானது. உதாரணமாக இந்த அரசியல் குழப்பங்கள் உருவாக்கப்பட்ட ஓக்டோ பர் 26 இல் இருந்து டிசம்பர் 5 வரை இலங்கையின் மூலதனம் மற்றும் பங்குச் சந்தையிலிருந்து 51 பில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கடொலர் நிதி வெளி யேற்றப்பட்டுள்ள நிலை நிச்சயமாக நல்வாய்ப்பற்ற நிலையே அல்ல.

ஆனால் இதனையெல்லாம் கவனத்தில் கொள்ளும் அரசியல் முகங்கள் தான் நாட்டில் இல்லையே.