Breaking News

பறிபோன ஆட்சியை விரைவில் கைப்பற்றுவோம்! சூளுரைக்கும் ஐ.தே.க!

சிறிலங்கா ஜனாதிபதியுடன் மஹிந்த ராஜபக்ச இணைந்து தம்மிடம் இருந்து பறித்துக்கொண்ட ஆட்சி அதிகாரத்தை விரைவில் கைப்பற்றி விடுவோம் என சூளுரைத்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிறேமதாச, ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியில் முதலில் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படுமெனத் தெரிவித்துள்ளாா்.

குறிப்பிட்ட தினத்திற்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்தப் போவதில்லையென சிறிலங்கா ஜனா திபதி மைத்ரிபால சிறிசேன அறி வித்துவரும் நிலையிலேயே, ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக மைத்ரி பால சிறிசேன உருவாக்க முற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் சஜீ பிரேமதாச நேற்றைய தினம் அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது இவ் வாறு தெரிவித்துள்ளாா்.

“நியமிக்கப்பட்ட தினத்துக்கு முன்னதாக எந்தவொரு தேர்தலும் நடத்தப்பட மாட்டாது. இன்று முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியது தேர்தலுக்கு அல்ல. தேர்தலுக்கு முன்னர் நாம் எமது அபிவிருத்தி பயணத்தை நிறைவு செய்ய வேண்டும்.

அபிவிருத்தியின் ஊடாகவே மக்கள் பிரதிநிதிகள் பலம்பெற வேண்டும். முது கெலும்புடன் மக்களின் வீடுகளுக்கு சென்று வாக்கு கேட்கும் வகையில் இருக்க வேண்டும். மஹிந்த ராஜபக்சவுக்கு தேவையான விதத்தில் தேர்தலை நடந்த நாங்கள் தயார் இல்லை.

நாங்கள் எமது நிலையை உறுதிப்படுத்திகொள்ளும் தருணத்தில் ஒரு தேர்த லுக்கு மாத்திரம் அல்ல 100 தேர்தல்களுக்கும் நாங்கள் தயார் என்ற விடயத்தை அடிமட்ட உறுப்பினர்கள் வரை தெரிவிக்க வேண்டும்.

அரசியல் வேலைத்திட்டம், அபிவிருத்தி வேலைத்திட்டம், தேர்தல் வேலைத் திட்டம் ஆகிய மூன்றையும் உரிய வகையில் ஒன்றிணைத்து கொண்டு செல்ல வேண்டும்.

1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தியமை காரணமாக எமது கட்சிக்கும் நாட்டுக்கும் ஏற்பட்ட பாதிப்பு தொட ர்பில் புதிதாக ஒன்றும் உங்களுக்கு வகுப்பெடுக்க வேண்டிய அவசியம் இல்லை வரலாற்றில் எங்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனாலேயே பெரும் பின்னடைவில் இருந்து அதி உச்சமான நிலைக்கு கட் சியை கொண்டுவர முடிந்துள்ளது. எனவே தேர்தலை நடத்துவதென்றால் அதிக பட்ச வெற்றியை பெற்றுக்கொள்ளும் தேர்தலையே நடத்த வேண்டும்.

தேர்தலில் சிறப்பான வெற்றியை பெற்றுக்கொள்ள அபிவிருத்தி வேலைத் திடங்களை முழுமையாக நிறைவேற்றி காண்பிக்கவேண்டும். வேலைத் திட் டங்களை செயற்படுத்திய பின்னர் முதலில் ஜனாதிபதி தேர்தலையே நடத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளாா்.