Breaking News

மஹிந்த-மைத்திரி வியூகம்! அடுத்தது என்ன?

நீதிமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு இன்றைய தினம் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலை யில் அதி தீவிர வியூகத்தில் தென்னிலங்கையின் முக்கிய புள்ளிகள் வெளியா கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு மைத்திரிக்குச் சாதகமாக அமைந்தால் எவ்வாறான நகர்வு களை மேற்கொள்வது என்பது தொடர் பில் ரணில் தரப்பினரும், மைத்திரி க்கு எதிராக அமைந்தால் எவ்வாறான வியூகங்களை அமைப்பது என்பது தொடர்பில் மஹிந்த-மைத்திரி தரப்பி னரும் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகும் நாள் உறுதியாக அறிவிக்கப்படவில்லை யாயினும் இன்றோ அல்லது நாளையோ வெளியாகலாமென எதிர்பார்க்கப் படுகிறது.

கடந்த வாரம் நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகள் வெள் ளிக்கிழமை ஏழு மணியுடன் நிறைவுக்கு வந்தன. இந்த நிலையிலேயே இன்றைய தினமும் நாளைய தினமும் மனு எடுத்துக்கொள்ளப்படுமென ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற ஆயம் தீர்மானித்துள்ளது.