Breaking News

ஐ.தே.மு வுடன் ஒப்பந்தம் இல்லையேல் ரொலோ ஆதரவு வழங்காது - சிவாஜிலிங்கம்.!

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து பங்காளிக் கட்சிகளும் இணைந்து எடுத்த ஒருமுடிவல்ல என கூட் டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோவின் முதல்வர் எம்.கே.சிவாஜிலிங்கம் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளாா்.

கூட்டமைப்பின் தீர்மானங்களை எடுப்பதற் காகஅமைக்கப்பட்டுள்ள பங்காளிக் கட்சிக ளின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தினை கூட்டமாலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட் டுள்ளதாக அறிவித்துள்ள சிவாஜிலிங்கம், ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைப்ப தற்கு முன்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிபந்தனைகளை விதிக்க தவறுமாக இருந் தால் ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இருவரும் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்க மாட்டார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள் ளாா்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில்  ஊட கவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ரெலோவின் முதல்வர் எம்.கே. சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.