மைத்திரிக்கு மனநோய் சோதனைக்காக நீதிமன்றில் மனுத்தாக்கல். ! (காணொளி)
ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மனநிலையை சோதனைக்கு உட்படுத்த வேண்டுமென வலியுறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு வொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்கா ஜனாதிபதி மனநிலை பாதி க்கப்பட்டுள்ளதாகவும், அதனாலேயே அவர் தொடர்ச்சியாக தவறான செயற் பாடுகளை மேற்கொண்டு வருவதாக இந்த மனுவை தாக்கல் செய்துள்ள லக்மல் ஜயவர்தன தெரிவித்துள் ளாா்.
மனநோய் சட்டத்தின் ஊடாக சிறில ங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவின் மனநிலை ஆரோக்கியமான நிலையில் உள்ளதா என்பது தொடர் பில் கண்டறிய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிப ருக்கு உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவில் செயற்பாட்டாளரான லக்மால் ஜயவர்தனவின் சார்பில் சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தன இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று பிற்பகல் தாக்கல் செய்துள்ளார். அரசியலமைப்பின் 140ஆவது பிரிவின் படி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக லக்மால் ஜயவர்தனவின் சட்டத் தரணி சிசிர குமார சிறிவர்தன தெரிவித்துள்ளாா்.
சிசிர குமார சிறிவர்தன – “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை காரணமாக இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவ தாக தெரிவிக்கப்படும் கருத்து நாட்டு மக்களின் பெரும்பான்மையானவர்க ளின் எண்ணத்தில் காணப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை பாதிப்படைவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் அமைந்துள்ளதாக நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். மிகவும் தூர பிரதேசத்தில் இருந்து வந்து அதியுயர் பதவியான ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டமையால் அந்த பொறுப்பில் உள்ள பாரத்தை தாங்க முடியாமல் ஜனாதிபதிக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கக் கூடும்.
இரண்டாவதாக அவரது குடும்பத்தினர் பக்கமிருந்து பார்த்தால், அவருக்கு உறங்கு நிலையில் மனநோய் இருந்தாக அவருடைய மகள் எழுதிய புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது காரணமாக நாங்கள் நம்புவது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வின் அருகில் இருந்த பாதகாப்பு படைகளில் பிரதானி ஒருவர் 20 மில்லியன் ரூபாய் கப்பம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளாா்.
இந்த சம்பவம் அவருக்கு பாரியளவிலான மனத்தாக்கத்தை ஏற்படுத்தியிரு க்ககூடும். சிறிலங்காவிற்கு அமெரிக்கா நன்கொடையாக வழங்கவிருந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை நிறுத்தி வைத்திருக்கின்றது.
இந்தத் தகவலை உறுதிப்படுத்திய கொழும்புக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அலைனா பி டெப்ளிஸ், விரைவில் சிறிலங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பம் தீர்க்கப்பட்டால் இந்த நன்கொடை மீள வழங்கப்படும் என் றும் உறுதியளித்தார்.
எனினும் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட அரசியல் குழப்பம், வெளிப் படைத் தன்மையாகவும், ஜனநாயகத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் உட் பட்டு தீர்க்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கத் தூதுவர் நிபந்தனை விதித் துள்ளார்.
சிறிலங்கா ஜனாதிபதிமைத்ரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் 26-ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, மஹிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்ததை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பம் தீர்க்கப்படாது தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.
இந்த நிலையில் உடனடியாக அரசியல் குழப்பத்தை தீர்த்துவைக்குமாறு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிக்கு அழுத்தம் கொடுத்துவரும் அமெரிக்கா, சிறிலங்காவிற்கு வழங்கவிருந்த பல உதவிகளை நிறுத்தி வைத்துள்ளதுடன், சிறிலங்காவிற்கும் – அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையையும் இடை நிறுத்தி வைத்திருக்கின்றது.
இந்த நிலையில் அமெரிக்க அரசின் இந்த நிலைப்பாட்டை கடந்த நவம்பர் 30 ஆம் திகதி கொழும்புக்கான புதிய தூதுவராக பொறுப்பேற்றுக்கொண்ட அலைனா பி டெப்ளிசும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்.
டிசெம்பர் பத்தாம் திகதியான இன்றைய தினம் திங்கட்கிழமை கண்டிக்கு விஜயம் செய்திருந்த கொழும்புக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப் ளிஸ், சிங்கள பௌத்த மக்களின் அதி உயர் மத பீடங்களாக அஸ்கிரி மற்றும் மல்வது பீடங்களுக்கும் சென்று மகாநாயக்கத் தேரர்களை சந்தித்துள்ளார்.
சிறிலங்காவின் உள்விவகாரங்களில் அமெரிக்கா அத்துமீறி தலையிடுவதாக குற்றம்சாட்டிவரும் பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர், தாங்கள் அரசியல் குழப்பம் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதற்கான காரணங்களை தெளிவுபடுத்தினார்.
இதனையடுத்து மல்வது பீடத்திற்கும் விஜயம் செய்த அமெரிக்கத் தூதுவர் அலைனா, மல்வது மகாநாயக்கத் தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்ட துடன், அவரது விஜயத்திற்கான காரணத்தை தெளிவுபடுத்தினார்.
இதனையடுத்து அங்கு கூடியிருந்த ஊடகவியலாளரக்ளின் கேள்விகளுக்கு பதிலளித்த அலைனா, அமெரிக்கா சிறிலங்காவிற்கு நன்கொடையாக வழங்கவிருந்த 500 மில்லியன் டொலர் நிதியை நிறுத்தி வைத்திருக்கும் தகவலை உறுதிப்படுத்தினார்.
எனினும் எனது இந்த விஜயத்துடன் அதற்கு தொடர்பில்லை. ஆனால் இதற்கு முன்னர் நாம் வெளியிட்ட அறிக்கைகளிலும் இதனை விரிவாக குறிப்பிட் டிருந்தோம். புத்தாயிரம் ஆண்டு சவால்களை வெற்றிக்கொள்வதற்காக சிறி லங்காவிற்கு அமெரிக்கா நன்கொடையாக 500 மில்லியன் டொல்கள வழங்கத் திட்டமிட்டிருந்தது.
இதனை சிறிலங்கா திருப்பிச் செலுத்தத் தேவையில்லை. முற்றிலும் நன்கொடையாகவே இந்த தொகை வழங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் சிறிலங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் காரணமாக இடை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
எனினும் அரசியல் குழப்பங்கள் தாமதமின்றி, வெளிப்படைத் தன்மையுடன் ஜனநாயகத்திற்கும், அரசியல் சாசனத்திற்கும் முழுமையாக மதிப்பளித்து தீர்க்கப்படும் என்று நான் நம்புகின்றேன்.
அவ்வா தீர்க்கப்பட்டால் மில்லேனியம் சவால்களை வெற்றிகொள்வதற்கான உடன்படிக்கையை மீள ஆரம்பிக்க முடியும்”. சிறிலங்கா ஜனாதிபதியும், அர சியல் கட்சித் தலைவர்களும் உடனடியாக ஒரு முடிவிற்கு வந்து, அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அமெரிக்க தூதுவர் கேட்டுக்கொண்டார்.
அவ்வாறு செய்யாதுவிடின் சிறிலங்கா மேலும் பல உதவிகளை இழக்க நேரிடும் என்றும் அமெரிக்கத் தூதுவர் எச்சரிக்கை விடுத்தார். “ இந்த நன் கொடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசியல் குழப்பம் எவ்வாறு தீர்த்து வைக்கப்படுகின்றது என்பதை நாம் பொறுமையுடன் பார்த்துக்கொண்டிருக் கின்றோம்.
பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டால் இந்த உதவி தொகையை வழங்குவது தொடர்பிலான பேச்சுக்களை உடயடிகான ஆரம்பிக்க முடியும். சிறிலங்கா வைப் பொறுத்தவரை இது மிகவும் முக்கியமான முதலீடாகவே நான் கருது கின்றேன்.
இதனைத்தவிர மேலும் பல உதவித் தொகைகளை தொடர்ந்தும் அமெரிக்கா வழங்கவிருக்கின்றது. இத் தொகைகளை திருப்பிச் செலுத்தத் தேவை யில்லை.
இவற்றுக்கு வட்டி செலுத்தத் தேவையில்லை. முழுமையாக நன்கொடை யாகவே வழங்கப்படுகின்றன. சிறிலங்கா மக்களின் அதி உச்சமான முன்னேற் றத்தையும், சுபீட்சத்தையும் கருத்திற்கொண்டே இந்த நன்கொடைகள் வழங் கப்படுகின்றன.
அதேவேளை சிறிலங்காவிற்கும் – அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டு ஒத்துழைப்பு நடவடிக்கையாகவும் இதனை நாம் மேற்கொள்கின்றோம்”. இதேவேளை அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்ளிஸ் தனது கண்டி விஜ யத்தின் போது சிங்கள பௌத்த மக்களின் புனித தளமாகத் திகழும் சிறி தலதா மாளிகைக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனா்.

- நன்றி ஐ.பி.சி இணையத்திற்கு -