Breaking News

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அணி தகுதியிழப்பினால் சி.வி.க்கு சித்தார்த்தன் கடிதம்.!

தமிழ் மக்கள் பேரவை இயக்கத்தில் ஓர் அங்கமாக இருக்கும் தகுதியை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற அமைப்பு இழந்து நிற்கின்றது.

அவர்களின் செயற்பாடுகளே தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர் வைக் காண்பதற்கு பலமான அழுத் தக் குழுவாக செயற்படத்தக்க ஒரு பெரும் மக்கள் இயக்கத்திற்குள் இரு ந்த ஒற்றுமையைச் சிதைத்ததுடன், தமிழ் மக்கள் பேரவை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக எழுச்சி பெறுவ தற்கு தடையாக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் வலியுறுத்தி தமிழ் மக்கள் பேரவை இணைத் தலைவர்களான சி.வி.விக்கினேஸ்வரன், பூ.லக்ஸ்மன் மற்றும் த.வசந்தராஜா ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே  மேற்கண்டவாறு விவரித்துள் ளாா்.

அவர் தொடர்ந்தும் கூறியுள்ளதாவது,

தமிழ் மக்கள் பேரவையானது, தமிழ் தேசிய இனப் பிரச்சினைக்கான, நின்று நிலைக்கக்கூடிய, எல்லோரும் ஏற்றுக் கொள்ளத்தக்க, ஒரு தீர்வை வென்றெ டுப்பதற்கான பலமானதோர் அழுத்தக் குழுவாக இயங்குவதற்கான ஒரு மக்கள் இயக்கமாகவே உருவாக்கப்பட்டது.

இவ்வாறான ஓர் அடிப்படையில் கூட்டிணையுமாறு அழைக்கப்பட்டதாலேயே, எமது கட்சி அதில் இணைந்து கொண்டது. தமிழ் இனத்தின் உரிமைகளை வென்றெடுக்கும் ஒரு பொது நோக்கம் இருந்தாலும்,

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், அந்த பொது இலக்கைச் சென்றடையும் அணுகுமுறை தொடர்பாக வெவ்வேறான வழிமுறைகள் இருந்தன. அணுகு முறை சார்ந்து வெவ்வேறான கொள்கைகள் இருப்பதனால்தான் வெவ்வேறு அரசியற்கட்சிகள் இருக்கின்றன.

அந்த வேறுபாடுகளை ஏற்று, ஆனால் ஒருங்கிணைந்து செயற்படவே தமிழ் மக்கள் பேரவை ஏற்படுத்தப்பட்டது. தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட பொழுது அதன் இணைத் தலைவர்களுள் ஒருவரான நீதியரசர் சி.வி. விக்கினேஸ்வரன், அதில் இணைக்கப்பட்ட அரசியற் கட்சியான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் எமது கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்பன தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளாகும்.

ஆனாலும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி அங்கம் வகித்த தமிழ் மக்கள் பேரவையில் நாம் இணைந்தது, ஒரு பொது நோக்கத்தின் அடிப்படையில் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

வடக்கு எழுக தமிழ், கிழக்கு எழுக தமிழ் ஏற்பாடுகள் மற்றும் இரண்டு எழுக தமிழ் நிகழ்வுகளுக்கான பிரகடனங்களைத் தயாரித்தமை, பேரவையால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுத் திட்டத்தை தயாரித்தமை, அரசமைப்பு சபையின் வழிகாட்டல் குழு வெளியிட்ட இடைக்கால அறிக்கைக்கான பதில் அறிக்கை தயாரித்தமை என்பவற்றில் மூன்று கட்சிகளின் பிரதிநிதிகளும் இணைந்தே செயற்பட்டனர்.

ஏனெனில், ஒரு பொது நோக்கின் அடிப்படையிலேயே நாம் இணைந்தி ருந்தோம். இவ்வாறெல்லாம் ஒன்றிணைந்து பணியாற்றிய பின்பு, தற்போது திடீரென ஏனைய கட்சிகளைப் பேரவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என உப்புச் சப்பற்ற காரணங்களையும்,

பொய் கதைகளையும் கூறுவது மட்டுமன்றி, விக்கினேஸ்வரனை தவறானவர் என்று சித்தரித்து, அவருக்கு போட்டியாக இன்னுமொரு மாற்று தேர்தல் அணியை பேரவைக்கு உள்ளே இருந்தே ஆட்களை எடுத்து உருவாக்க முனை வதானது, தமிழ் தேசிய மக்கள் முன்னணி பேரவைக்குள் இணைந்த நோக் கமே, அடுத்தவர்களைப் பாவித்து தமது கட்சியை வளர்ப்பதற்கு மட்டுமே என்பது புலனாகியுள்ளதெனத் தெரிவித்துள்ளாா்.