Breaking News

புலம் பெயர் தேசங்களில் சொகுசு வாழ்க்கையா? .....

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் எங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை, எங்களது அமைப்பு அந்த கொலைச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் பல தரப்பினராலும் முன் வைக் கப்பட்டு வருவது சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அப்படி, நாங்கள் தான் ஈடுபட்டோமெ னில் அதற்கான ஆதாரங்கள் எதையே னும் காட்ட முடியுமா? என கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் அறி க்கை ஒன்று வெளியாகியுள்ளது.

அறிக்கையை வெளியிட்டவர்களுள் ஒருவரும், புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் என மேற்காண் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வருமான குருபரன் குருசாமி, தமிழக ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் வழங்கியுள்ளாா்.

அதில், இலங்கையில் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டு விட்டதாகவும், இலங்கைக்குள்ளாகவே சுயாட்சி உரிமையையே தமிழர்கள் வேண்டி நிற்ப தாக ஓர் பிம்பம் உண்டாக்கப்பட்டுள்ள சூழலில், மீண்டும் உங்களை போன்ற வர்கள் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் உள்ளதென அறிவிக்க முயல்வது ஏன்? உங்களது சொகுசு வாழ்க்கைக்காக புலிகளின் பெயரை பயன்படுத்துகிறீர்களா? என கேள்வியெழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த குருபரன், "எங்களின் தார்மீக உரிமையான தமிழீழம் கோரியே அரசியல் வழியில் - ஆயுத வழியில் போராட்டங்கள் நடைபெற்றது. ஒவ்வோர் கட்டத்திலும் எங்களிடம் ஆயுத வழிமுறையை திணித்தது சிங்கள பேரினவாத அரசுதான்.

பயங்கரவாத முத்திரை குத்தி புலிகளை அழிப்பதாக கூறி மாபெரும் இன அழிப்பை இலங்கை அரசு மேற்கொண்ட போது வேடிக்கை பார்த்த உலக நாடு கள் இன்று நாங்கள் அமைதி வழியில் போராட்டத்தை தொடர்கிறோம் என அறிவிக்கின்றபோது பதற்றமடைவது ஏன்?" என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும், "எங்கள் தேசத்தை விட்டு சொகுசு வாழ்க்கை வாழவா புலம் பெயர் தேசங்களுக்கு நாங்கள் வந்தோம். அன்றைக்கு எங்களை பயங்கரவாதிகள் என் றவர்கள் இன்று தமிழ் மக்களுக்கு செய்திட்ட உதவி தான் என்ன?

யூத மக்களை போன்று தங்களுக்கான சொந்த தேசம் அமைகிற வரையில் தாயக கனவுகளுடன், அகதிகளாக அந்நிய நாடுகளில் வாழ்கிறோமே தவிர எங்களின் தாயக கனவுகளை விட்டொழித்து விடவில்லை" எனத் தெரிவித் துள்ளார்.