Breaking News

தெலுங்கு மொழி மக்களுக்கு எதிராக பேச்சு - சீமான் மீது வழக்குப் பதிவு.!

சமூகத்தில் இரு மொழி மக்களிடையே பிளவுகளை உண்டாக்கும் வகையில் பேசிய காரணத்தினால் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான், கடந்த 2016 மார்ச் மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ், தெலுங்கு மக்களிடையே பிரி வினையைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்திட வேண்டுமென வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 (1) (a) - ன் (இரு பிரிவினரிடையே பகைமையை உண்டாக்கும் வகையில் பேசுதல்) என்ற பிரிவின் கீழ் சென்னை, தரமணி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, சீமான் மீது தரமணி காவல் நிலையத்தில் விடுதலைப் புலிகளு க்கு ஆதரவாகப் பேசியதாக எழுந்த புகாரின் கீழ் பிரிவு 153 (வன் முறையைத் தூண்டும் விதத்தில் பேசுவது), 153(A) (சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது) ,505(1)(a) (b)

பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வண்ணம் பேசுவது), 504 (பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பேசுவது), 505(1)(a)(c) (தவறான வதந் திகளைப் பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது) and 505 (ii) (சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்புவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.