Breaking News

அமெரிக்கா பயணமாகவுள்ளாா் நிதி அமைச்சர்.!

நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நாளை வெள்ளிக்கிழமை அமெ ரிக்காவுக்கு பயணமாகவுள்ளாா்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக தவணை அடிப்படையில் கடனை கொடுக்க தீர்மானித்த நிலையில் குறி த்த கடன் வழங்குவதை திடீரென சர்வதேச நாணய நிதியம் நிறுத்தி விட்டதால் இது தொடர்பாக கலந்து ரையாடல் ஒன்றை நடாத்துவதற்காக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்கு பயணமாக வுள்ளாா்.

நிதி அமைச்சரின் செயலாளர் ஆர்.எம்.எச். சமரதுங்க மற்றும் மத்திய வங்கி யின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் நிதியமைச்சருடன் அமெரிக் காவிற்கு பயணமாகவுள்ளாா்.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற் றும் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.

கடந்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியில் குழப்பங்கள் காரணமாக அமெரிக்கா கடன் வழங்கும் காலத்தை தவணை அடிப்படையில் வழங்குவ தாக கூறிய நிலையில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை மத்திய வங்கிக்கு, இந்திய மத்திய வங்கி 400 கோடி அமெரிக்கா டொலரை கடனாக வழங்க இணங்கியுள்ளது. இலங்கையில் வெளிநாட்டின் இருப்புக்களை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி, இந்திய மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் குறித்த தொகையை இந்திய மத்திய வங்கி வழங்க தீர்மானித்துள்ளது.

இது தவிர இன்னும் அமெரிக்க டொலர் பில்லியன் தொகையை பெற்றுக் கொள்ள இந்திய மத்திய வங்கியோடு இரு வழி பரிமாற்றம் மூலம் கையொப் பம் ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.