பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்.! - THAMILKINGDOM பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்.! - THAMILKINGDOM
 • Latest News

  பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்.!

  பாதுகாப்புக் காரணங்களால் பாடசாலைகள் மூடப்பட்டபோது தவறவிடப்பட் டிருந்த கற்றல் செயற்பாடுகளை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு, அதிபர்களை அறிவுறுத்தியுள்ளது.

  இதேவேளை, எக்காரணத்திற்காகவும் தவணைப் பரீட்சைகள் இரத்து செய் யப்படமாட்டாது என அமைச்சின் மேலதிக செயலாளர் M.M. ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

  இதனால் தவறவிடப்பட்ட கற்றல் செயற்பாடுகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்ப தற்கான அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட் டுள்ளார். தற்போது பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

  இந்தத் தடவை தவணைப் பரீட்சைகள் நடாத்தப்படுமா என பலர் வினவுவதாக சுட்டிக்காட்டியுள்ள M.M. ரத்னாயக்க, தவணைப் பரீட்சைகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்டவை வழமைபோன்று நடைபெறுமெனத் தெரிவித்துள் ளாா்.

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்.! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top