Breaking News

விடுதலையானார் ஞானசார தேரர்

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை யாகி வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகியுள்ளாா். 

நீதி­மன்ற அவ­ம­திப்பு உள்­ளிட்ட நான்கு குற்­றங்கள் தொடர்பில் விதிக்­கப்­பட்ட இந்த சிறைத் தண்­ட­னையை 6 வரு­டங்­களில் அனு­ப­விக்க வேண் டும் என அப்­போ­தைய மேன்முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­ப­தியும் தற்­போ­தைய உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­ச­ரு­மான ப்ரீத்தி பத்மன் சூர­சேன மற்றும் ஷிரான் குண­ரத்ன ஆகியோர் அடங்­கிய நீதி­ப­திகள் குழு கட்­ட­ளை­யிட்­டி­ருந்­தது.

2016 ஆம் ஆண்டு ஜன­வரி 25 ஆம் திகதி அல்­லது அதனை அண்­மித்த நாளொன்றில் ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்ற தனக்கு சம்­பந்­தமே இல்­லாத வழக்­கொன்றில் ஆஜ­ராகி நீதி­மன்றின் கெள­ரவம் சட்­டத்தின் ஆட்­சிக்கு சவால் விடுத்­தமை ஊடாக மன்றை அவ­ம­தித்­தமை,

எக்­னெ­லி­கொட காணாமல் ஆக்­கப்­பட்­டமை குறித்த வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது, அதனை வழி நடத்­திய அரச சிரேஷ்ட சட்­ட­வாதி திலீப பீரிஸை முறை­யற்ற வார்த்தைப் பிர­யோ­கங்­களைப் பயன்­ப­டுத்தி திட்டி அவ­மா­னப்­ப­டுத்­தி­யமை,

நீதி­மன்றின் கட்­ட­ளைக்கு செவி­சாய்க்­காமை, நீதி­மன்ற சுயா­தீன தன்­மைக்கு சவால் விடுத்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்கள் அர­சி­ய­ல­மைப்பின் 105 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக சட்ட மா அதி­பரால் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்த நான்கு குற்­றச்­சாட்­டுக்­க­ளுமே சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­பிக்­கப்­பட்­ட­தாக மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் அறி­வித்­தது. அதன்­படி முத­லா­வது, இரண்­டா­வது குற்­றங்கள் தொடர்பில் ஞான­சார தேர­ருக்கு தலா 4 வருட கடூ­ழிய சிறைத் தண்­ட­னை­யையும் 3 ஆம் குற்­றத்­துக்கு 6 வருட கடூ­ழிய சிறைத் தண்­ட­னை­யையும் 4 ஆவது குற்­றத்­துக்கு 5 வருட கடூ­ழிய சிறைத் தண்­ட­னை­யு­மாக மொத்தம் 19 வருட கடூ­ழிய சிறைத் தண்­டனை விதித்து நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது. அதனை 6 வரு­டங்­களில் அனு­ப­விக்­கவும் இதன்­போது நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

தண்­ட­னையை அவர் அனு­ப­வித்து வந்த நிலை­யி­லேயே, பல தரப்பில் இருந் தும் ஞான­சார தேரரை பொதுமன்­னிப்பின் கீழ் விடு­விக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இந்நிலையில் கடந்த வார இறுதியில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு சிறை வைத்தியசாலையில் ஞானசார தேரருடன் கலந்துரையாடியிருந்தார்.

அதன்பின்னர் நேற்று முன் தினம் சிறைச்சாலையிடமிருந்து விஷேட அறிக்கை கோரி நேற்று அவரை விடுவிப்பதற்கான ஆவணங்களில் கை யெழுத்திட்டதுடன், அந்த ஆவணமும் சிறைச்சாலை ஆணையாளர் அலு வலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்த ஆவணம் இன்று மாலை சிறைச்சாலை ஆணையாளருக்கு கிடைக் கப்பெற்றதன் பின்னரே ஞானசாரர் தேரரை வெலிக்கடை சிறைச்சாலை அதி காரிகள் விடுதலை செய்துள்ளனர்.

இந் நிலையில் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியேறிய ஞானசார தேர ரரை காண்பதற்காக பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்களும், அவரது ஆதரவாளர்களும், ஊடகவியலாளர்களும் சிறைச்சாலைக்கு வெளியே காத்தி ருந்தமையும் குறிப்பிடத்தக்கது.