Breaking News

இலங்­கைக்கான பய­ணத்­த­டையை தளர்த்­தி­யது இந்­தியா

இலங்­கைக்கு விடுக்­கப்­பட்­டி­ருந்த பயணத் தடையை இந்­தியா தளர்த்­தி­யுள்­ளது. ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மூன்று தேவா­ல­யங்கள் மற்றும் மூன்று நட்­சத்­திர விடு­தி­களை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வத்தில் 257 பேர் உயி­ரி­ழந்­தி­ருந்­த­துடன், 500 ற்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்ளனா். 

இவ்­வாறு நடத்­தப்­பட்ட தாக்­குதல் சம்­ப­வத்தில் இந்­தி­யர்கள் உள்­ளிட்ட பல வெளி­நாட்­ட­வர்கள் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர். இதை­ய­டுத்து, இலங்­கைக்கு செல்­வ­தனை மறு அறி­வித்தல் வரை தவிர்த்­துக்­கொள்­ளு­மாறு சர்­வ­தேச நாடுகள் தமது பிர­ஜை­க­ளுக்கு அறி­வு­றுத்தல் விடுத்­தி­ருந்­தன.

இந்த நிலையில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவுக்கும், வெளி­நாட்டு தூது­வர்­க­ளுக்கும் இடையில் செவ்­வாய்க்­கி­ழமை விசேட கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெற்­றது. இலங்­கையில் 99 வீதம் பாது­காப்பு இயல்பு நிலைக்கு திரும்­பி­யுள்­ளதை தான் உறு­திப்­ப­டுத்­து­வ­தாக ஜனா­தி­பதி இதன்­போது குறிப்­பிட்­டி­ருந்தார்.

அத்­துடன், அவ­ச­ர­கால சட்­டத்தை தொடர்ந்தும் நீடிக்கும் தேவை இனி­வரும் காலங்­களில் ஏற்­ப­டாது எனவும் ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருந்தார். இதே­வேளை, வெளி­நாட்டு தூது­வர்­க­ளுக்கும், பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்­க­விற்கும் இடை யில் அண்­மையில் பேச்­சு­வார்த்­தை­யொன்று இடம்­பெற்­றது.

இலங்கையின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளதால், இலங்கை மீது விதிக் ­கப்­பட்­டுள்ள பயணத் தடையை நீக்­கு­மாறு பிர­தமர் இதன்­போது கோரிக்கை விடுத்­தி­ருந்தார். இந்த பின்­ன­ணி­யி­லேயே, இலங்கை மீது விதிக்­கப்­பட்­டி­ருந்த பயணத் தடையை இந்­தியா நேற்­று­முன்­தினம் தளர்த்திக் கொண்­டுள்­ளது.

இலங்­கையில் ஊர­டங்கு சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் நட­வ­டிக்கை கைவி­டப்­பட்­டுள்­ள­தா­கவும், சமூக வலைத்­த­ளங்கள் மீதான தடை தளர்த்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் இலங்­கைக்­கான இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. அத்­துடன், பயங்­க­ர­வாதத் தாக்­கு­தலின் பின்னர் மூடப்­பட்­டி­ருந்த அனைத்து பாட­சா­லை­களின் கல்வி நட­வ­டிக்­கைகள் மீள ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளதை உயர் ஸ்­தா­னி­க­ரா­லயம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

எனினும், இந்­திய பிர­ஜைகள் இலங்­கைக்கு விஜயம் செய்யும் போது, மிகவும் அவ­தா­னத்­துடன் செயற்­ப­டு­மாறும் இலங்­கைக்­கான இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் கோரிக்கை விடுத்­துள்­ளது. இலங்­கைக்கு விஜயம் செய்யும் இந்­தியப் பிர­ஜை­க­ளுக்கு ஏதேனும் உத­விகள் தேவைப்­ப­டு­மாயின், அது தொடர்பில் அறிந்­து­கொள்­வ­தற்கும், உத­வி­களை நாடு­வ­தற்கும் தொலை­பேசி இலக்­கங்கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இதன்படி, 0094-772234176, 0094-777902082, 0094-112422788 மற்றும் 0094-112422789 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரி வித்துள்ளது. இதேவேளை சுவிட்ஸர்லாந்தும் இலங்கைக்கான பயணத் தடையை நீக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.