Breaking News

அடக்குமுறைகளை சர்வதேச சமூகம் தடுக்க வேண்டும் - சம்­பந்தன் ஆஸி. தூதுவருக்கு வலியுறுத்தல்

இலங்­கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தாக்­கு­தலின் பின் னர் சிறு­பான்மை இன மக்­களைக் குறி­வைத்து அடக்­கு­மு­றைகள் தொடர்­கின்­றன. அவற்றை உட­ன­டி­யாக சர்­வ­தேச சமூகம் தடுத்து நிறுத்த வேண்டும். அப்­பாவி மக்கள் பாதிக்­கப்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது.

அதே­வேளை, தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் மற்றும் நேர­டி­யாகத் தொடர்­பு­பட்­ட­வர்கள் என அனை­வரும் தண்­டிக்­கப்­பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இலங்­கைக்­கான அவுஸ்­தி­ரே­லியத் தூது­வ­ராகப் புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள டேவிட் ஹொலி­வுக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கும் இடையே நேற்­று­முன்­தினம் சந்­திப்பு நடை­பெற்­றது. இதன்­போதே சம்­பந்தன் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.



மேலும் தெரி­வித்­த­தா­வது,

இச் சந்­திப்பில் இலங்­கையில் சிறு­பான்மை இன மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள், காணி விடு­விப்பு, மீள்­கு­டி­யேற்றம், தமிழ் அர­சியல் கைதிகள் விடு­தலை விவ­காரம், தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு, ஐ.நா. தீர்­மா­னத்தின் பரிந்­து­ரைகள் மற்றும் இலங்கை விவ­கா­ரத்தில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் பங்­க­ளிப்பு தொடர்பில் விரி­வாகப் பேசினோம்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி – உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தாக்­கு­தலின் பின்னர் சிறு­பான்மை இன மக்­களைக் குறி­வைத்து கைதுகள், சோத­னைகள், கெடு­பி­டிகள் மற்றும் வன்­மு­றைகள் தொடர்­கின்­றன. அவ­ச­ர­காலச் சட்­டத்தால் எமது மக்கள் ஒன்றும் செய்ய முடி­யாது அச்­சத்தில் வாழ்­கின்­றனர்.

எனவே, இந்த அடக்­கு­மு­றை­களை சர்­வ­தேச சமூகம் உடன் தடுத்து நிறுத்த வேண்டும். அப்­பாவி மக்கள் பாதிக்­கப்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது. கிறிஸ்­தவ மக்கள் மற்றும் வெளி­நாட்டுப் பய­ணி­களை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட இந்த மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தலின் பின்­னணி என்ன என்­பது தொடர்பில் உண்­மைகள் வெளிக்­கொ­ண­ரப்­பட வேண்டும்.

உண்­மைகள் மறைக்­கப்­ப­டக்­கூ­டாது. தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் மற்றும் நேர­டி­யாகத் தொடர்­பு­பட்­ட­வர்கள் அனை­வரும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும். இந்தத் தாக்­கு­தலின் பின்னர் பல இடங்­களில் வன்­முறைச் சம்­ப­வங்கள் நடை­பெற்­றுள்­ளன.

பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்­த­வர்கள் இந்த வன்­மு­றை­களில் ஈடு­பட்­டுள்­ளதைக் காணொ­ளிகள் ஊடாகக் காண­மு­டி­கின்­றது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்­குதல் மற்றும் அதன் பின்னர் இடம்­பெற்ற வன்­முறைச் சம்­ப­வங்கள் அர­சியல் பின்­ன­ணியில் அரங்­கே­றி­யுள்­ளதா என்ற சந்­தேகம் வலுப்­பெற்­றுள்­ளது.

யார் குற்­ற­மி­ழைத்­தி­ருந்­தாலும் அவர்கள் அனை­வரும் கைது­செய்­யப்­பட்டு இன, மத, பதவி வேறு­பா­டின்றி தண்­டிக்­கப்­பட வேண்டும். இதை சர்­வ­தேச சமூ­கமும் வலி­யு­றுத்த வேண்டும் எனவும் அவுஸ்­தி­ரே­லி யாத் தூது­வ­ரிடம் எடுத்­து­ரைத்தேன். வடக்கு, கிழக்கில் படை­யி­னரின் கட்­டுப்­பாட்டில் இருக்கும் மக்­களின் காணிகள் தொடர்­பிலும் பேசினோம்.

காணிகள் பல விடு­விக்­கப்­பட்­டி­ருந்­தாலும் ஏனைய காணி­களும் விடு­விக்­கப்­பட வேண்டும் எனவும், அப்­போ­துதான் மீள்­கு­டி­யேற்றம் முழுமை பெறும் எனவும் தெரிவித்துள்ளேன் என்றாா்.