Breaking News

மாமா வேலை பார்ப்பதை நிறுத்த வேண்டும் கூட்டமைப்பு - விக்கி.!

கல்­முனை பிரச்­சினைக்குத் தீர்வு காணாமல் கூட்­ட­மைப்பு அர­சாங்­கத்­திற்கு மாமா வேலை செய்து கால அவ­கா­சத்தை வழங்கப் பார்க்­கின்­றது. அவர்கள் இந்த மாமா­ வேலை செய்யும் பழக்­கத்தை நிறுத்த வேண்டும் என வட­மா­காண முன்னாள் முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் கோரி­யுள்ளார்.

அத்­துடன் உண்­ணா ­வி­ர­தி­களின் கோரிக்­கைக்கு ஆத்­மார்த்­த­மான ஆத­ரவை வழங்­கு­வ­தோடு கல்­முனை கள நிலை­மை­களை நேரில் அறி­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேரில் செல்­ல­வேண்டும் என்றும் கோரி­யுள்ளார்.

கனடா 'வாணிபம்' வியா­பார தகவல் கையேட்டு நிறு­வ­னத்­தி­னரின் நிதி அனு­ச­ர­ணையில் மக்கள் நலன் காப்­ப­கத்தின் 'அன்­பகம் ' மூதாளர் மாதாந்த உத­வித்­திட்ட ஆரம்ப நிகழ்வு நேற்று கிளி­நொச்­சியில் நடை­பெற்­ற­போது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்துள்ளாா்.

மேலும் தெரி­விக்­கையில்,

எமது மக்­களை உள்­நாட்டு யுத்தம் என்ற பெயரில் அவர்­களின் உடை­மை­களை உற­வு­களை அழித்து அக­தி­க­ளாக்­கிய பொறுப்பை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். அர­சாங்கம் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு இழப்­பீடு கொடுக்க வேண்­டி­ய­தில்லை என்ற எண்­ணத்தைக் கொண்­டி­ருக்­கின்­றது.

பயங்­க­ர­வாதம் என்ற பதத்தை வைத்து எம் மக்­களைப் பயங்­க­ர­மாகப் பதம் பார்த்­தது அர­சாங்­கமே. நாம் கேட்ட நியா­ய­மான அர­சியல் கோரிக்­கை­களை அர­சாங்­கங்கள் தந்­தி­ருந்தால் மக்கள் கிளர்ந்­தெழத் தேவை எழுந்­தி­ருக்­காது அரச பயங்­க­ர­வாதம் எம் மக்­களின் வாழ்க்­கையை நிர்­மூ­ல­மாக்க வேண்­டிய அவ­சி­யமும் ஏற்­பட்­டி­ராது.

இவை­பற்­றி­யெல்லாம் அர­சு­டனும் சர்­வ­தே­சத்­து­டனும் பல­வ­ழி­களில் பேசிப் பார்த்­தா­யிற்று. எமது அனைத்து முயற்­சி­களும் ஏதோ வகை­களில் மழுங்­க­டிக்­கப்­பட்டு வரு­கின்­றன. கல்­முனை உப­பி­ர­தேச செய­ல­கத்தைத் தரம் உயர்த்­து­வது சம்­பந்­த­மாக நாங்கள் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி மட்­டக்­க­ளப்பில் இருந்து கல்­மு­னைக்கு நடை­ப­வனி ஆரம்­பித்­தி­ருந்தோம்.

சுமார் ஒரு கிலோ­மீற்றர் நடந்­து­போ­ன­போது பொலி­ஸாரால் தடுத்து நிறுத்­தப்­பட்டோம். அங்­கி­ருக்கும் கிறிஸ்­தவ ஆல­யத்தில் குண்­டு­வெ­டிப்பு அன்று காலை நடந்­தது பற்றி அப்­போ­துதான் அறிந்து கொண்டோம். நடை­ப­வ­னியை அன்று கைவிட்­டாலும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுடன் இன்று வரையில் தொடர் பில் இருந்து வரு­கின்றோம்.

உண்­ணா­வி­ர­தி­களைக் கண்டு எமது ஆத்­மார்த்த ஆத­ர­வினை வெளிப்­ப­டுத்தி வரு­கின்றோம். ஆனால் நேற்­றைய(நேற்று முன்­தினம்) சம்­ப­வங்கள் எனக்கு அதிர்ச்­சி­யூட்­டு­கின்­றன. அர­சாங்கம் காலம் கடத்­தினால் உண்­ணா­வி­ர­தி­களின் உயி­ருக்கு ஆபத்து விளை­யக்­கூடும்.

தமிழ் பிர­தே­ச­செ­ய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வ­தாக அறிவித்;து உண்­ணா­வி­ர­தி­களின் உயிர்­களைக் காப்­பாற்ற வேண்டும். அவர்­களின் கோரிக்கை நியா­ய­மா­னது. அவர்­களைக் காப்­பாற்­றாது விட்டால் நிலைமை மிக மோச­மாகி விடும். தமிழ், முஸ்லிம், சிங்­கள மக்கள் அடி­பட்டு சாகக்­கூ­டிய நிலைமை உரு­வா­கக்­கூடும்.

உயிர்த்த ஞாயிறு குண்­டு­வெ­டிப்பு பற்றி அச­மந்தப் போக்கைக் கடைப்­பி­டித்த அர­சாங்கம் இதிலும் இவ்­வா­றான போக்கைக் கடைப்­பி­டிக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்து கால அவகாசத்தை எடுத்துக் கொடுக்கப் பார்க்கின்றது.

அவர்கள் இந்த மாமா வேலை செய்யும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். நிலைமையை அறிய பிரதமர் உடனே குறித்த இடத்திற்குச் சென்றால் சிறப்பெனத் தெரிவித்து