Breaking News

மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அசத்தல்.!

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக் கெட்டுக்களினால் அசத்தலாக வெற்றியை தனதாக்கியுள்ளது.

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 23 ஆவது போட்டி ஹோல் டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள், மோர்தசா தலைமையிலான பங்களா தேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு டவுன்ட னில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங் களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வு செய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முத லில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக் களை இழந்து 321 ஓட்டங்களை குவித்தது.

322 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ண யித்த வெற்றியிலக்கை கடந்தது. பங்களாதேஷ் அணியின் முஷ்பிகுர் ரஹும் மாத்திரம் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்திருந்தாலும், ஏனைய வீரர்கள் அனை வரும் தங்களது பங்களிப்பினை செவ்வனே நிறைவேற்றினார்கள்.

அதன்படி தமீம் இக்பால் 48 (53) ஓட்டத்தையும், சவுமிய சர்கார் 29 (23) ஓட்டத் தையும், பெற்று ஆட்டமிழந்ததுடன், சகிப் அல்ஹசன் 99 பந்துகளில் 16 நான்கு ஓட்டம் அடங்கலாக 124 ஓட்டத்துடனும், லிட்டன் தாஸ் 69 பந்துகளில் 8 நான்கு ஓட்டம், 4 ஆறு ஓட்டம் அடங்கலாக 94 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதி ருந்தனர்.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் ரஸல், உஷேன் தோமஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.