சி.விக்கி மீது குற்றச்சாட்டு - சுமந்திரன்
அரசாங்கத்தின் வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் சென்று கூறுவது மாமா வேலை அல்ல. விக்கினேஸ்வரனின் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களுக்கு கூட்டமைப்பு செவி கொடுக்காது.
அதேபோல் விக்கினேஸ்வரன் தனது அரசியல் சுயலாபங்களுக்காக எந்தளவு கீழ் மட்டத்தில் வீழ்ந்துள்ளார் என்பது நன்றாக வெளிப்பட்டுவிட்டது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளாா்.

கல்முனை வடக்கு பிரதேச சபை விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு மாமா வேலை செய்கின்றது என வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பகிரங்கமாகத் தெரிவித்துள்ள நிலையில் அதற்குப் பதில் கூறும் வகையிலேயே சுமந்திரன் எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதுமே முன்னின்று செயற்பட்டு வருகின்றது. இன்று வரை வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பெற்றுக் கொண்டுள்ள தமது உரிமைகளுக்கு எமது தலையீடுகள் பிரதான காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது.
காணி விடுவிப்புகள் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை மறந்துவிடக் கூடாது. இப்போது கல்முனை வடக்கு செயலகப் பிரிவு விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர்.
இன்று எமது தமிழ் மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரும் கூட உள்ளனர். இவை கட்சி அடையாளங்கள் பார்த்து முன்னெடுக்கப்படும் விடயமல்ல.
அவ்வாறு இருக்கையில் அரசாங்கத்தின் அறிக்கையை கல்முனையில் சென்று வாசித்தமை மாமா வேலை என முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் கூறியது மிகவும் கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகமாகும்.
எமது மக்களின் உரிமைகளையும் எமக்கான அடையாளங்களையும் நாம் பெற்றுக்கொள்ள அரச தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் அரசாங்கம் எமக்கு கொடுத்த வாக்குறுதிகளை எமது மக்கள் முன்னிலையில் நாம்தான் எடுத்துக் கூற வேண்டும்.
அரசாங்கம் நேரடியாக வந்து அந்தப் பகுதியில் அறிக்கையைத் தராது. இந்தப் பகுத்தறிவு கூட இல்லாத நபர்கள் தகுதியற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்கின்றனர்.
முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் பிரயோகிக்கும் வார்த்தைப் பிரயோகங்கள் மூலமாக அவர் எந்தளவு கீழ்த்தரமான அரசியலைச் செய்கின்றார் என்பதும் அவர் எந்த மட்டத்தில் இன்று விழுந்துள்ளார் என்றும் நன்றாகத் தெரிகின்றது.
ஆனால் இவரின் இந்த நிலைமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பும் விழப்போவதில்லை. நாம் எமது மக்களிடம் நேரடியாக பிரச்சினைகளை எடுத்துக் கூறி தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்போம். விக்கினேஸ்வரன் போன்று கீழ்மட்ட அர சியல் செய்து மக்களை ஏமாற்ற மாட்டோம் என குற்றம் சுமத்தியுள்ளாா்.