அமெரிக்க வட கொரிய தலைவர்கள் சந்திப்பு.!
வடகொரியாவுக்குள் கால்பதித்த பதவியிலுள்ள முதலாவது அமெரிக்க ஜனா திபதி என்ற பெருமையை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெற்றுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்குமிடையிலான சந்திப்பு, இராணுவமயப்படுத்தப்பட் டுள்ள கொரியா எல்லைப் பகுதியில் இன்று நடைபெற்றது.
அதியுயர் பாது காப்பு வலயத்தில் இரு தலைவர்க ளும் சந்தித்துள்ளனா்.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் அழைப்பிற்கிணங்க, வடகொரிய எல்லைக்குள் ஜனாதிபதி ட்ரம்ப் பிரவேசித்தார். தொடர்ந்து அமெரிக்க ஜனாதி பதியுடன் இணைந்து வடகொரிய ஜனாதிபதி தென்கொரிய எல்லைக்குள் பிர வேசித்துள்ளாா்.
அங்கு கிம் ஜோங் உன்னை வரவேற்பதற்காக தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் வருகை தந்திருந்தார். இதன்பின்னர் அமெரிக்க மற்றும் வடகொரிய ஜனாதிபதிகளுக்கிடையில் சுமார் ஒருமணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற் றுள்ளது.
இதன்போது கைவிடப்பட்ட அணுவாயுதம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. தமது தென்கொரிய விஜயத்தின் போது வடகொரிய ஜனாதிபதியைச் சந்திக்க விருப்பம் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி நேற்றைய தினம் தமது டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்த அழைப்பை ஏற்று வடகொரிய ஜனாதிபதி அவரைச் சந்தித்தமை குறிப் பிடத்தக்கது. இதனிடையே கடந்த பெப்ரவரி மாதம் அணுவாயுத களைவு தொடர்பில் இரு தலைவர்களிடையே இடம்பெற்ற சந்திப்பு ஒப்பந்தங்களின்றி முடிவடைந்தது. ஒரு வருட காலப்பகுதியில் இரு தலைவர்களிடையே நடை பெற்றமை மூன்றாவது சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.