Breaking News

புலிகளே போர்க்குற்றமிழைத்தனர் முதலாவது வழக்கு ஆரம்பம்

விடுதலைப் புலிகள் போர்க்குற்றமிழைத்தனர் என்று
நிரூபிப்பதற்கான ஆதாரம் கிடைக்கக்கூடிய முதல் வழக்காக முன்னாள் போராளிகள் மூவருக்கும் எதிரான வழக்கை எதிர்பார்ப்பதாகச் சட்ட மா அதிபர் திணைக்களம் வவுனியா மேல் நீதிமன்றுக்கு நேற்று அறிவித்தது.

போர்க் கைதிகளாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடற்படையினர் மற்றும் இராணுவத்தினர் 26 பேரைக் கொலை செய்ததன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க்குற்றமிழைத்தனர் என்று என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளிகள் மூவருக்கு எதிரான வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் நேற்று விசார ணைக்கு வந்தது.
சந்தேகநபர்கள் மூவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அவர் களுக்கு திருத்தப்பட்ட குற்றப்பத் திரிகை மன்றினால் வழங்கப் பட்டது. இதன்போதே வழக்குத் தொடருநரான சட்ட மா அதிபர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட அரச சட்டவாதி மாதவ தென்னக் கோன் மேற்கண்டவாறு மன்றில் கூறினார்.

2009ஆம் ஆண்டு இறுதிப் போரின் போது முல்லைத்தீவு விஸ்வமடுப் பகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த போர்க் கைதிகளான கடற்படையி னர் மற்றும் இராணுவத்தினர் 26 பேரைப் பெற்றோல் ஊற்றி எரி
யூட்டிக் கொலை செய்தனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி களான மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் சிவதுரை திருவருள் ஆகிய மூவரும் 2012 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

2017ஆம் ஆண்டு சந்தேகநபர் கள் மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட்டது. எனினும் இந்த வழக்கின் சாட்சி களுக்கு அச்சுறுத்தல் உள்ள தாகத் தெரிவித்து வழக்கு அநுராத புரம் மேல் நீதிமன்றுக்கு சட்ட மா அதிபரால் மாற்றப்பட்டது.

நீதிமன்ற நியாயத்திக்கத்தின் அடிப்படையில் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றிலேயே நடத்தப்படவேண்டும் என்று அவர்கள் சார்பில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் சட்ட மா அதிபரால் வழக்கு மீளவும் வவுனியாமேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது.

2012ஆம் ஆண்டு தொடக்கம் முன்னாள் போராளிகளான மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் சிவதுரை திருவருள் ஆகிய மூவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக 7 வருடங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

சந்தேகநபர்கள் மூவரும் பலத்த பாதுகாப்புடன் அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத் தர்களால் மன்றில் முற்படுத்தப்பட்டனர். சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்டவாதி மாதவ தென்னக்கோன் மற்றும் அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்த் ஆகியோர் முன்னிலையாகினர்.

சந்தேகநபர்கள் சார்பில் மூத்த சட்டவாதி அன்ரன் புனிதநாயகம் முன்னிலையானார். சந்தேகநபர்களுக்கு திருத்தப் பட்ட குற்றப்பத்திரிகை மன்றி னால் வழங்கப்பட்டது.